30.6 C
Chennai
Monday, Jun 17, 2024
21 1498037154 footcandy
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடுமாம்!

பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.

இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது. நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர்.

இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது. சரி வாங்க இனி இதை பயன்படுத்துவதால் என்னென்ன அற்புதங்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

#1 : அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். மேலும் இது தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.

#2: உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

#3: உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.

#4: தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.

#5: தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

#6: சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.

#7 : உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது.

#8: 2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும். இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க இப்போதே இந்த மருத்துவ குணம் வாய்ந்த கற்கண்டை பயன்படுத்தி உங்கள் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுங்கள்.

21 1498037154 footcandy

Related posts

தினமும் ஊற வைத்த பாதாமை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

இரவில் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்

nathan

டயட்டில் இருப்பவர்களுக்கு கோதுமை மிளகு தோசை

nathan

எச்சரிக்கை இந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க…

nathan

காலை வேளையில் குடிப்பதற்கு ஏற்ற சில ஆரோக்கிய பானங்கள்!!!

nathan

நைட் தூங்கும் முன் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை வெறும் வயிற்றில் ஆண்கள் சாப்பிடலாமா?

nathan

ஆண்களுக்கு அதிக சக்திதரும் நீர்முள்ளி பால்

nathan

பருவ பெண்கள் அழகுடன் ஜொலிக்க என்னென்ன சாப்பிடலாம்?

nathan