26.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
30 1512018417 2
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா வாரத்தில் ஒரு நாள் இந்த மீனை சாப்பிட்டால், நோய்கள் எல்லாம் 10 அடி தள்ளியே நிற்கும்!

நாம் தினசரி சாப்பிடும் உணவான சைவ உணவுகளிலேயே பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட, நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவை சாப்பிடலாம். அசைவ உணவு என்று வரும் போது நாம் சாப்பிடும் கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியை விட மீன் உணவை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

மீன் என்பது சிறியவர்கள் வரை பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு மிகச்சுவையான உணவாகும். அதிலும் பிரஷ் ஆன மீனில் உள்ள சுவை என்பது வேறு எதிலும் கிடைக்காது. மீன் என்று வரும் பொழுது உங்களுக்கு இன்னொரு சந்தேகமும் வரும்… எந்த மீனில் அதிக சத்துக்கள் உள்ளது… எந்த மீன் உடலுக்கு மிகவும் நல்லது என்ற சந்தேகம் தான் அது…!

மீன்களில் மிகவும் குறைவான விலையில் கிடைப்பது நெத்திலி மீனும், மத்தி மீனும் தான்.. இதன் விலை குறைவு என்பதற்காக இதன் சுவையில் குறைவு இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.. இது சுவையில் அலாதியானது ஆகும்…! இந்த பகுதியில் நெத்திலி மீன் மற்றும் மத்தி மீன்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றியும் தரமான மீனை எப்படி தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது பற்றியும் காணலாம்.

இதய ஆரோக்கியம் நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

செல்லுலார் பழுது செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும், இந்த திசுக்களில் உள்ள கோளாறுகளை சரி செய்யவும் தேவையான அளவு புரோட்டீன் நெத்திலி மீனில் உள்ளது.

சரும ஆரோக்கியம் நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன. எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும்.

பற்கள் மற்றும் எலும்புகள் நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்து. அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

கண் ஆரோக்கியம் நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

உடல் எடை குறைய நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.

அறிவாற்றல் மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது.

மூளை வளர்ச்சிக்கு மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.

கெட்ட கொழுப்புகளை தடுக்க மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது.

புற்றுநோய் வாய்ப்பு குறைவு மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.

கர்ப்பிணி பெண்களுக்கு.. பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.

ஆஸ்துமா ஆஸ்துமா என்பது குழந்தைகளை தாக்கும் பிரச்சனைகளில் ஒன்று. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

மன அழுத்தம் குறைய மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது. தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது.

மத்தி மீனின் நன்மைகள் மத்தி மீனில் இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது. 100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.மேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.

வைட்டமின் டி மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

சர்க்கரை நோய்க்கு… சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

கால்சியம் மாத்திரைகள் தயாரிக்க.. மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் கேரள மக்கள் அதிகமாக மத்தி மீனை சாப்பிடுகிறார்கள் போல தெரிகிறது….!

தரமான மீனை தேர்ந்தெடுப்பது எப்படி? கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும். செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும். மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது. மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும். தசைப்பகுதி உறுதியாக இருக்கும். கடல் பாசி மனம் இருக்கும்.

தரமற்ற மீனை கண்டுபிடிப்பது எப்படி? மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும். விரும்பத்தகாத (அழுகிய) முட்டை மணம் அல்லது அம்மோனியா மணம் அல்லது கழிவுப்பொருட்களின் வாடை வீசும். மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும். செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும். மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும். தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும்.

எப்படி சாப்பிடலாம்? கேரளாவில் இதன் பயன்பாடு அதிகம். அங்கே இதை சாளை என்பார்கள். தமிழகத்து மத்திமீனைவிட கேரளாவின் மத்திமீன் ருசியில், சதையில், மணத்தில், மருத்துவக்குணத்தில் தலைசிறந்தது. ஆனாலும், எக்காலத்திலும் ஏழைகளின் உணவு இதுவே. காரணம் விலை குறைவாக கிடைக்கும் என்பதே. இந்த மீனை மாங்காய்போட்டு குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவை மிக அருமையாக இருக்கும். அந்தக்குழம்பை மறுநாள் சுண்டவைத்து சாப்பிட்டால் சொர்க்த்தில் இருப்பது போன்ற அனுபவம் கிடைக்கும். என்ன இந்த வாரம் உங்க வீட்டுல மீன் குழம்பு தானே வைக்க போறீங்க…!!!30 1512018417 2

Related posts

பெண்களுக்கு நன்மை பயக்கும் மீன் உணவுகள்

nathan

சுவையான உருளைக்கிழங்கு குர்குரே

nathan

டயட்டில் இருப்போர் அதிகம் பயன்படுத்தும் ஓட்ஸ் கொழுக்கட்டை

nathan

அடேங்கப்பா மாதுளம்பழத் தோலில் இவ்வளவு நன்மைகளா..?

nathan

மூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்

nathan

நார்ச்சத்து, வைட்டமின், புரோட்டின் இல்லாத மைதா மாவு

nathan

ஆரோக்கியமான உணவிற்கான சில அடிப்படை ஆயுர்வேத வழிகாட்டுதல்கள்!!!

nathan

கறிவேப்பிலை சாறு

nathan

2 வாரங்களுக்கு கொத்தமல்லி தழை அழுகாமல் இருக்கணுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan