10 1470831096 3 grape juice beauty benefits
ஆரோக்கிய உணவு

திராட்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

பழங்களில் நிறைய பேர் விரும்பி சாப்பிடும் ஓர் பழம் தான் திராட்சை. இந்த திராட்சையை அப்படியே சாப்பிட பலர் விரும்பினாலும், இப்பழத்தை ஜூஸ் போட்டுக் குடித்தாலும் இப்பழத்தின் முழு சத்துக்களையும் பெறலாம். அதிலும் திராட்சை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். சரி, இப்போது திராட்சை ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடிப்பதால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் ஆய்வு ஒன்றில், கருப்பு திராட்சையால் ஜூஸ் போட்டு குடித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.

மாரடைப்பு தடுக்கப்படும் திராட்சை ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், இதயத்தில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

மெட்டபாலிசம் மேம்படும் திராட்சை ஜூஸ் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். அதிலும் சிவப்பு திராட்சையால் தயாரிக்கப்படும் ஜூஸைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசம் பல மடங்கு அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம் திராட்சை ஜூஸ் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதற்கு அதில் உள்ள ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை தான் காரணம். மேலும் திராட்சை ஜூஸ் இதய தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதைத் தடுக்கும்.

எடை குறைவு திராட்சை ஜூஸ் நேரடியாக உடல் எடையைக் குறைக்க உதவாவிட்டாலும், இதனை உடற்பயிற்சி செய்து முடித்த பின் ஒரு டம்ளர் குடிப்பதன் மூலம், மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.

ஒற்றைத் தலைவலி திராட்சை ஜூஸை சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால், ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இரத்தம் சுத்தமாகும் திராட்சை ஜூஸ் இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுத்து, உடலில் இருக்கும் இரத்தத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

10 1470831096 3 grape juice beauty benefits

Related posts

இரும்புச்சத்து நிறைந்த வல்லாரை!

nathan

கீரையில் உள்ள எண்ணற்ற சத்துக்கள்

nathan

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்

nathan

காரட் ஜூஸ் இவ்வளவு நன்மைகளா?

nathan

பாஸ்தா சூப் செய்முறை….!

nathan

சுவையான வெஜிடேபிள் பிரியாணி

nathan

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் முள்ளங்கி சூப்! தெரிஞ்சிக்கங்க…

nathan

அடிக்கடி முருங்கைக்காய் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

ஏலக்காய் – தேங்காய்ப் பால்

nathan