27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
itchy hands feet 03 1514977148
சரும பராமரிப்பு

உள்ளங்கால் ரொம்ப அரிக்குதா? அப்ப இத படிங்க!

சிலருக்கு உள்ளங்காலில் கடுமையான அரிப்பு ஏற்படும். உள்ளங்கால் அரிப்பதற்கு அதிகப்படியான வறட்சி மட்டுமின்றி, ஈரத்தில் அதிகளவு ஊறி இருப்பது போன்றவை காரணங்களாகும். ஆனால் உள்ளங்கால் சிவந்தோ, துர்நாற்றத்துடனோ, வெடிப்புகளுடனோ, தோல் உரிந்தவாறோ இருந்தால், நிலைமை சற்று மோசமாக உள்ளது என்று அர்த்தம்.

இவை உள்ளங்காலில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். இப்படி உள்ளங்காலில் ஏற்பட்ட தொற்றுகளை சில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம். இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்தால், உள்ளங்கால் சருமத்தின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மென்மையும் அதிகரிக்கும். இருப்பினும் உள்ளங்காலில் ஏற்பட்ட தொற்றுகள் தீவிரமாக இருப்பது போல் தோன்றினால், முதலில் மருத்துவரை அணுகி, அவரது பரிந்துரையின் பேரில் இயற்கை வழிகளை மேற்கொள்ளுங்கள். சரி, இப்போது உள்ளங்காலில் ஏற்படும் கடுமையான அரிப்புக்களைப் போக்க உதவும் இயற்கை வழிகளைக் காண்போம்.

பேக்கிங் சோடா உள்ளங்கால் அரிப்பிற்கு பேக்கிங் சோடா நல்ல பலனைத் தரும். இது உள்ளங்காலில் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளித்து, அசௌகரியத்தையும் குறைக்கும். அதற்கு 2-3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, உள்ளங்காலில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவுங்கள்.

பெட்ரோலியம் ஜெல்லி வறட்சியால் ஏற்படும் உள்ளங்கால் அரிப்பை பெட்ரோலியம் ஜெல்லி போக்கும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன், பெட்ரோலியம் ஜெல்லி உள்ளங்காலில் நன்கு தடவி, சாக்ஸ் அணிந்து கொண்டு உறங்குங்கள். இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், உள்ளங்கால் அரிப்பு போய்விடும்.

உப்பு நீர் ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வையுங்கள். இப்படி ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை செய்யுங்கள். இதனால் உள்ளங்கால் அரிப்பு விரைவில் போய்விடும்.

புதினா எண்ணெய் புதினா எண்ணெய் உள்ளங்கால் அரிப்பைப் போக்கும். இதற்கு அதில் உள்ள குளுமைப் பண்புகள் தான் காரணம். இதனைப் பயன்படுத்தினால் உள்ளங்கால் அரிப்பில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். அதற்கு புதினா எண்ணெயை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வையுங்கள். இதனால் உள்ளங்கால் அரிப்பு போவதோடு, கால்களும் பட்டுப்போன்று இருக்கும்.

வெள்ளை வினிகர் ஒரு அகலமான வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, வெள்ளை வினிகரை 2-3 டேபிள் ஸ்பூன் கலந்து, அந்நீரில் கால்களில் சில நிமிடங்கள் ஊற வையுங்கள். இதனால் அதில் உள்ள அசிடிக் பண்புகள், பாதங்களில் உள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியக்களை அழித்து, தொற்றுக்களைப் போக்கும். ஆனால் இந்த சிகிச்சைக்குப் பின், கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த மறக்க வேண்டாம்.

ஓட்ஸ் அகலமான வாளியில் 1-2 கப் ஓட்ஸைப் போட்டு, வெதுவெதுப்பான நீர் நிரப்பிக் கொள்ளுங்கள். பின் அதில் பாதங்களை சிறிது நேரம் ஊற வையுங்கள். பின் பாதங்களை மென்மையாக ஸ்கரப் செய்து, சுத்தமான நீரில் கழுவி, பின்பு மாய்ஸ்சுரைசர் தடவுங்கள். வறட்சியால் ஏற்படும் உள்ளங்கால் அரிப்பிற்கு இது ஒரு நல்ல சிகிச்சையாகும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஹைட்ரஜன் பெராக்ஸைடு பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை அழிக்கும். எனவே ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து கலந்து, சில நிமிடங்கள் கால்களை அந்நீரில் ஊற வைக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், உள்ளங்கால் அரிப்பு விரைவில் போய்விடும். ஆனால் 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடைத் தான் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், சருமம் கடுமையாக பாதிக்கப்படும்.

டீ-ட்ரீ ஆயில் மற்றும் கற்றாழை கற்றாழை ஜெல்லில் சில துளிகள் டீ-ட்ரீ ஆயிலை சேர்த்து கலந்து, உள்ளங்காலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் ஈரத் துணியால் துடைத்து எடுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், விரைவில் உள்ளங்கால் அரிப்பு சரியாகும்.

எலுமிச்சை ஒரு அகலமான வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அதில் கால்களை ஊற வையுங்கள். இதனால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் பண்புகள், அரிப்பை உண்டாக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை அழித்து, உள்ளங்கால் அரிப்பைப் போக்கும்.itchy hands feet 03 1514977148

Related posts

சருமத்தை தூய்மையாக்கும் கிளிசரின்

nathan

உங்கள் சமையலறையில் மறைந்துள்ள சில அழகு ரகசியங்கள்!!!

nathan

இருக்கவே இருக்கு இயற்கை சன் ஸ்கிரீன்!

nathan

இயற்கை முறையில் பேஷியல் செய்தால் நல்ல பயன்கள் உண்டு..!

nathan

சருமத்திற்கு அழகு சேர்க்கும் மூலிகை மருத்துவ டிப்ஸ்

nathan

அழகான சருமம் வேண்டுமா? இந்த பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்க…

nathan

சூரியகாந்தி எண்ணெயை தோல், முடி மற்றும் சருமத்திற்கு 11 சிறந்த நன்மைகள்

nathan

எண்ணெய் பசை சருமத்தினரை பொலிவாக்கும் இயற்கை வழிகள்

nathan

ஆரஞ்ச் பழங்களின் அழகு டிப்ஸ்

nathan