அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்க இத படிங்க!

சரும வறட்சி

பருவ கால மாற்றங்களால் நமக்கு ஏற்படுகிற முதல் பிரச்சினை சரும வறட்சி தான். அந்த சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிற்நத தீர்வாக மஞ்சள் இருக்கிறது. இது சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கிறது.

மஞ்சள் கிழங்கு

பொதுவாக மஞ்சள் கிழங்கை பச்சையாகவோ அல்லது வேகவைத்து அரைத்தோ முகத்துக்குப் பூசினால் அழகு கூடும் என்பது நமக்குத் தெரியும். நம்முடைய முன்னோர்கள் நம்மைப் போல ஆயிரக்கணக்கான க்ரீம்களையெல்லாம் பயன்படுத்தவில்லை. அவர்களுக்கு இருந்த ஒரு பியூட்டி க்ரீம் மஞ்சள் தான்.

beauty1 1

மஞ்சள் கிழங்கு ஆவி

பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்துவிடுவார்கள். ஆனால் ஆண்கள் அப்படி செய்ய முடியாது. அவர்கள் முகத்தை அழகாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவே கூடாதா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியெல்லாம் இல்லை. தன்னை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று யார் வேண்டுமானாலும் நினைக்கலாம். அப்படி இருக்கிறவர்களுக்காகத் தான்

எப்படி பிடிக்கிறது?

மூன்று கப் அளவுக்கு தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்க தண்ணீரில் பசும் மஞ்சள் கிழங்கை ஒரு இன்ஞ் அளவுக்கு எடுத்து அரைத்து அதில் கலந்து சிறிது நேரம் கலந்து கொதிக்க வையுங்கள்.

அப்படி கொதிக்கிற தண்ணீரை எடுத்து நன்கு ஆவி பிடியுங்கள். சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.

வேறு என்ன சேர்க்கலாம்?

இந்த ஆவி பிடிக்கிற தண்ணீருக்குள் வெறுமனே மஞ்சள் கிழங்கு மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

அதனுடன் சேர்த்து ஒரு கைப்பிடி அளவுக்கு துளசி இலைகளையும் போட்டுக் கொள்ளலாம்.

எலுமிச்சை

ஆவி பிடிப்பதற்கு எலுமிச்சையும் மிகச் சிறந்த பொருள். பொதுவாக ஆவி பிடிக்கிற பொழுது, அதனுள் சிறிதளவு எலுமிச்சை இலைகளைப் போடுங்கள்.

ஜலதோஷம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சினைகள் கூட குணமாகியிருக்கும்.

எலுமிச்சை இலைகள் கிடைக்காதவர்கள் அரை மூடி எலுமிச்சை சாறைக்கூட சேர்த்துக் கொள்ளலாம்.

நீங்கள் எலுமிச்சை கழத்தை சாறெடுத்துவிட்டு, தோல்களைத் தூக்கி கீழே போட்டு விடாதீர்கள். அதை பத்திரப்படுத்தி வைத்து அந்த தோல்களைக் கூட தண்ணீரோடு சேர்த்து கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம்.

ஆவி பிடித்த பின்,

பொதுவா ஆவி பிடித்த பின்னால் நாம் அப்படியே டவலில் துடைத்துக் கொண்டு, அடுத்த வேலை பார்க்கக் கிளம்பிவிடுகிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது.

ஆவி பிடித்து முடித்த பின்பு, துண்டால் துடைத்துக் கொண்டு பின் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்கு தேய்க்க வேண்டும்.

ஆவி பிடித்த பின்னர், நம்முடைய முகத்தில் உள்ள சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது அவசியம்.

அதன்பின் ஏதாவது ஒரு பேஸ்பேக் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவிவிடுங்கள். உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்கும்.

கஸ்தூரி மஞ்சள்

ஆவி பிடிக்கும் தண்ணீரில் பசு மஞ்சள் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னோம். ஆனால் எல்லா சீசுன்களிலும் உங்களுக்குப் பசுமஞ்சள் கிடைக்காது.

சீசனில் மட்டும் தான் கிடைக்கும். மற்ற சமயங்களில் நீங்கள் கஸ்தூரி மஞ்சள் கூட பயன்படுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button