சிறந்த வாழ்க்கை வாழ வழிகாட்டும் நூல்கள் யாவும், அக்காலத்தில் காரணப்பெயரிட்டு அழைக்கப்பட்டன, அந்த வகையில் மனிதர் மன அழுக்கு நீக்கி, நல்வழி சேர வேண்டிய அவசியத்தை விளக்கும் பழம்பெரும் நீதிநெறி நூல், ஏலாதி என வழங்கப்படுகிறது. ஏலாதி என்பது, ஒரு சித்த மூலிகை மருந்தாகும். ஏலக்காய், இலவங்கம், சிறுநாவல்பூ, மிளகு, திப்பிலி மற்றும் சுக்கு போன்ற சக்திவாய்ந்த ஆறு மூலிகைகளை, ஒரு பங்கு ஏலக்காய், இரு பங்கு இலவங்கம், என்ற எண்ணிக்கை வரிசையில், முடிவாக ஆறு பங்கு சுக்கு என்ற அளவில் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு சூரணம் எனும் மூலிகைப்பொடியாகும். ஆறு வகையான மூலிகைகள் சேர்ந்து, மனிதர் உடலுக்கு பெரும் நன்மைகள் தருவதைப்போல, ஆறு வகையான நன்னெறித் தத்துவங்கள் மூலம், மனிதர் வாழ்வு உயர வழிகாட்டுகிறது, ஏலாதி நீதிநெறி நூல்!
சிறுபஞ்சமூல நீதிநெறி நூலாசிரியர் போல, ஏலாதி நூலாசிரியர் கணியன் மேதாவியாரும் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்பதை, இந்த நூல் வலியுறுத்தும் தத்துவங்களிலிருந்து, அறிந்துகொள்ளமுடியும்! அதற்கு முன் ஏலாதி சூரணத்தின் நன்மைகளை இங்கே பட்டியிலிடப்பட்டுள்ளது. படித்து பாருங்கள். பின் நீங்கள் நாட்டு மருந்து கடைகளிலிருந்து இந்த சூரணத்தை வாங்கி எப்போது கைவசம் வைத்துக் கொள்ள நினைப்பீர்கள்.
ஏலாதி சூரணத்தின் நன்மைகள் : உடலில் வியாதி எதிர்ப்பு திறனை அதிகரித்து, பசியின்மை, உணவு செரிமான பாதிப்பினால் உண்டாகும் வாந்தியைப் போக்கி, செரிமானத்தைத் தூண்டும் தன்மை மிக்கது. காமாலை எனும் உடல் சூட்டினால் உண்டாகக் கூடிய வியாதிகளைத் தீர்க்கும் ஆற்றல்மிக்கது.
கர்ப்பிணிகளின் செரிமானத்திற்கு: கருவுற்ற தாய்மார்களுக்கு உணவு செரிமானத்தை அளித்து, உடலுக்குத் தேவையான சத்துக்களை அளிக்கும் ஏலாதி சூரணம், உடலில் ஏற்படும் கிருமித் தொற்றைப் போக்கக்கூடியது.
சத்துக்கள் கிடைக்க : கருவுற்ற மூன்றாம் மாதத்தில் இருந்து ஏலாதியை தேனில் கலந்து, பெண்கள் உண்டுவர, பசியின்மை விலகி, உணவில் நாட்டம் அதிகரித்து, உடலுக்குத் தேவையான சத்துகள் கிட்டும். பசியைத்தூண்டி, உடல்நலம் காக்கும் ஏலாதி சூரணம், இதய வியாதிகளைப் போக்குவதில் அற்புத செயல்திறன் மிக்கது.
இதய பாதிப்புகள் போக்கும் : சிறுங்கி பற்பம் எனும் சித்த மருந்துடன் ஏலாதி சூரணம் சேர்த்து சாப்பிட, தீவிர நிலை இதய வியாதிகள் பாதிப்புகள் நீங்கி, நலமுடன் வாழ முடியும்.
இதய அடைப்பு குணமாக : இந்த மருந்தை முறையாக சாப்பிட, தற்காலத்தில் இதய இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய செய்யப்படும் ஆஞ்சியோ சிகிச்சையைக்கூட, தவிர்க்க முடியும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேனி பளபளப்புக்கு : உடல் எடையைக் குறைக்கவும், உடல் நிறத்தை மேம்படுத்தவும், ஏலாதி சூரணத்தை குளிக்கும்போது, உடலில் நன்கு தடவிக்கொண்டு, குளித்துவருவர். ஏலாதி பொடியை, நீரில் கலந்து, குளிக்கும் முன் உடலில், முகத்தில் தடவி, சற்றுநேரம் கழித்து, குளித்துவர, உடல் புத்துணர்வாகும், சருமம் பொலிவாகும். உடல் எடையும் குறையும்.
ஏலாதி நூல் சிறப்பு! சிறுபஞ்சமூல நீதிநெறி நூலாசிரியர் போல, ஏலாதி நூலாசிரியர் கணியன் மேதாவியாரும் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்பதை, இந்த நூல் வலியுறுத்தும் தத்துவங்களிலிருந்து, அறிந்துகொள்ளமுடியும்!
மனப்பிணி : பல விதத்தில் உடல் வியாதிகளைப் போக்கி நன்மைகள் தரும் ஏலாதி போல, மனிதரின் மன வியாதி களைந்து, நல்ல வழியில் வாழ வழிகாட்டும் நூல் தான் ஏலாதி எனும் தொன்மையான தமிழர் வாழ்க்கை வழிகாட்டி நூல். உடலிலுள்ள பிணிகளை ஏலாதி சூரணம் களைவதைப் போல், மனதிலுள்ள பிணிகளை களைய இந்த ஏலாதி நூல் உதவும் .