25.2 C
Chennai
Monday, Nov 25, 2024
25 1508933835 25 1361774148 shimeji
ஆரோக்கிய உணவு

காளானை யார் எல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா?அப்ப இத படிங்க!

காளான் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவுப் பொருளாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காளானை விரும்பி சாப்பிடுகின்றனர். காளான் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், காளானை வாங்கும் போது அது நல்ல காளானா என்று பார்த்து வாங்க வேண்டியது அவசியம். தீய காளானை சாப்பிடுவது ஆபத்தானது. மேலும் இதனை சிலர் சாப்பிடவும் கூடாது.

உயர் இரத்த அழுத்தம் காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

இரத்தத்தை சுத்தம் செய்ய காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

இதய பாதுகாப்பு பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

இரத்த நாளங்கள் மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

மூட்டு வாதம் காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

மார்பக புற்றுநோய் தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோயயை குணப்படுத்த பயன்படுகிறது.

குழந்தைகளுக்கு 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

மலச்சிக்கல் எளிதில் ஜீரணமாகும் தன்மைகொண்டது. மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

காய்ச்சல் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

சாப்பிட கூடாது! காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும். காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

25 1508933835 25 1361774148 shimeji

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்!!!

nathan

ஏன் தூங்குவதற்கு முன்பு ஒரு கிளாஸ் பால் உங்கள குடிக்க சொல்லுறாங்க தெரியுமா? தெரிந்துகொள்வோமா?

nathan

முட்டையை ஏன் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது தெரியுமா?

nathan

இதுவும் நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாம்.. வைட்டமின் F பற்றி கேள்விபட்டதுண்டா?

nathan

குழந்தைகளுக்கு சத்தான மிளகு – வேர்க்கடலை சாதம்

nathan

உயிரை பறிக்கும் விஷமாக மாறும் பழங்கள்… தெரிந்துகொள்வோமா?

nathan

இந்த கீரையின் தொக்கை சாப்பிட்டால் போதும்… நோய்கள் பறந்துபோகுமாம்…!

nathan

தெரிஞ்சிக்கங்க…கெட்ட கொழுப்பு நம் உடலில் தங்குவதை தடுக்க இதைச் சாப்பிட்டா போதும்!

nathan

உங்கள் பிள்ளைகளின் எடையை அதிகரிப்பதற்கான சில ஆரோக்கிய குறிப்புகள்!

nathan