டென்ஷன் என்பது இன்று எல்லாருக்கும் பொதுவான ஒன்றாகிவிட்டது, அப்போது நாம் அன்னிசையாக செய்கின்ற சில விஷயங்களில் ஒன்று நகம் கடிப்பது. நகம் கடிப்பது என்பது மைனர் பேட் ஹேபிட், அதனால் நகத்தில் இருக்கும் அழுக்கு வயிற்றுக்குள் போகும். என்ற ரீதியில் தான் நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் தொடர்ந்து நகம் கடிப்பதால் பல்வேறு ஆபத்தான நோய்த்தொற்றுகள் உங்களுக்கு ஏற்படுகிறது என்று தெரியுமா?
ஸ்டஃபிலோகோக்கஸ் : இதற்கு முன்னால் ஸ்ட்ஃபிலோகோக்கஸ் (staphylococcus)என்கிற பெயரைக்கூட கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இது ஒரு பாக்டீரியாவின் பெயர். இது பெரும்பாலும் நகம் கடிப்பதால் வருவது. இந்த பாக்டீரியா தொற்று ஏற்ப்பட்டால் கைவிரலில் கொப்புளங்கள் உண்டாகும், நகம் வளர்வதில் தாமதம் உண்டாகும், உணவு செரிப்பதில் சிக்கல் உண்டாகும். இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால் சாதரண ஆண்ட்டிபயாட்டிக் மருத்துக்கு எல்லாம் இது அடங்காது.
எஸ்ச்சீரிசியா கோலி : எஸ்ச்சீரிசியா கோலி என்று அழைக்கப்படும் இதனை பொதுவாக ஈ-கோலி என்று அழைக்கப்படும். இத்தொற்று குடலில் ஏற்படும். நீங்கள் சுத்தமாக கைகளை கழுவாமல் சாப்பிட்டாலும் இத்தொற்று ஏற்படும்.
ஹெர்பெடிக் விட்லோ : Herpetic whitlow என்பது ஹெர்ப்பஸ் சிம்ப்லெக்ஸ் வைரஸ் (herpes simplex virus) மூலமாக பரவுகிறது . அதிக நேரம் நகம் கடித்தால் இந்த வைரஸ் தொற்று ஏற்படும். இதனால் கைவிரலில் பூஞ்சான் பாதிப்பு ஏற்பட்டு புண் உண்டாகும். விரல் சிவந்து, வீங்கும், இது வயிற்றுக்குள் சென்றால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உண்டாகும்.
கேண்டிடா பராப்ஸிலோசிஸ் : Candida Parapsilosis ஈஸ்ட் பாக்டீரியா என்று அழைக்கப்படுகிறது. இது நகங்களில் ஒளிந்திருக்கும். அதனை வாயில் வைப்பதால் வயிற்றுக்குள் சென்று உள்ளுறுப்புகளில் எல்லாம் நோய்த்தொற்றை ஏற்படுத்திடும். முதலில் உணவு செரிப்பதை சிக்கல் ஏற்படுத்திடும், பின்னர் வயிற்றுக்குள் செல்லும். இந்த வைரஸ் அதிகமானால் இதயம், மூளை, கண், எலும்புகள் கூட பாதிப்படைய வாய்ப்புண்டு. இதற்கு தொடர்ந்து ஆண்ட்டி ஃபங்கல் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அபூர்வமாக அறுவைசிகிச்சை செய்து நகத்தை எடுக்க வேண்டிய சூழல் உண்டாகும்.
சால்மோனில்லோசிஸ் : சால்மோனெல்லா பாக்டீரியா வயிற்றுக்குள் சென்றால் அது உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இந்த பாக்டீரியா மட்டும் அதிகமாக வெயில் காலங்களில் பரவும் ஏனென்றால் இந்த பாக்டீரியா பெருகுவதற்கு வெது வெதுப்பான சூழல் அவசியம். கைகழுவாமல் உணவு உட்கொள்வது, செல்லப்பிராணிகளுடன் விளையாடிவிட்டு கை கழுவாமல் உணவு எடுப்பது, நகத்தை கடித்துக்கொண்டேயிருப்பது போன்றவற்றால் இந்த தொற்று ஏற்படுகிறது. இந்த வைரஸ் வயிற்றுக்குள் சென்ற 12 முதல் 72 மணி நேரங்களுக்குள் தன் வேலையை காட்டத் துவங்கிடும்.