28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
483
மருத்துவ குறிப்பு

இருமலைப் போக்க எளிய வீட்டு மருத்துவக் குறிப்புகள்!!!!

எந்த நோயாக இருந்தாலும் அதன் ஆரம்ப கட்டங்களிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் பல்வேறு நோய் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
அன்றைக்கு நம் எல்லாருடைய வீட்டிலும் பாட்டி இருந்தார்கள். சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு கை வைத்தியமாக அவர்கள் சொல்லும் மருத்துவம் கை கொடுத்தது. ஆனால் இன்றோ நியூக்ளியர் பேமிலி என்று சொல்லி தனித்தீவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எதற்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிடுவதும் தவறானது, இயற்கையான பொருட்களைக் கொண்டு தீர்க முடியுமா என்று பார்க்கவேண்டும் அதற்கும் அது அடங்கவில்லை என்றால் நிச்சயமாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

இந்த மழை நாட்களில் பலருக்கும் இருமல் இருக்கும் அதனை போக்க எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய டிப்ஸ் தெரிந்து கொள்ளுங்கள். முக்கியமாக இந்த கை வைத்தியங்கள் நோயின் ஆரம்ப நாட்களில் செய்து பார்க்கலாம். நோய் முற்றிய நிலையிலோ அல்லது நோய் இரண்டு நாட்களுக்கும் அதிகமாக தொடர்கிறது என்றாலோ மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியமான ஒன்று.

 

தேன் : தொண்டை வறண்டிருந்தாலும் இருமல் ஏற்படும். அதனை தீர்க்க தேன் சிரப் சிறந்த பலன் கொடுக்கும். வெறும் தேனை எடுத்து சாப்பிடலாம் அல்லது தேனுடன் சிறிதளவு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்தும் பருகலாம். தினமும் இரண்டு முறை இதனைச் செய்து வர மூன்று நாட்களில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கணும்.

தைம் டீ : தொடர் இருமல் அல்லது மார்பு வலியோடு இருமல் இருந்தால் தைம் இலைகளால் ஆன டீ செய்து பருகலாம். நீரில் தைம் இலைகளை போட்டு பத்து நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி சூடு ஆறியதும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

சூடான நீர் : குளிர் மட்டுமல்ல அதிக சூடு இருந்தாலும் இருமல் ஏற்படும். இருமலைத் தவிர்க்க சூடான நீரை பருகுங்கள். நிறைய மசாலா கலந்த உணவை சாப்பிட்டிருந்தால் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த நீரை பருகலாம். பெரியவர்கள் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நலம்.

மிளகு : சளிப்பிடித்து அதனால் ஏற்ப்பட்ட இருமலென்றால் இந்த மருந்தை முயற்சிக்கலாம். ஒரு தேக்கரண்டி தேனுடன் சிறிதளவு மிளகு கலந்து அப்படியே சாப்பிடலாம் அல்லது சூடான நீரில் தேன் மற்றும் மிளகு கலந்தும் குடிக்கலாம்.

தண்ணீர் : உடலில் போதிய அளவு தண்ணீர்ச் சத்து இல்லையென்றாலும் இருமல் தோன்றும். இருமல் வரும் போது மட்டும் தண்ணீர் எடுத்துக் குடிக்காமல் அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். சிலருக்கு அதிக தண்ணீர் குடித்தல் ஒமட்டல் ஏற்படும் அவர்கள் பழச்சாறு,சூப் போன்ற நீராகரங்களை எடுத்துக் கொள்ளலாம். தொண்டையை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது இருமலை தவிர்க்கச் செய்திடும்.

இஞ்சி : இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது. ஆரம்ப காலத்தில் காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் செயல்ப்பட்டது. வாரத்திற்கு இரண்டு முறை இஞ்சிச் சாறு குடித்து வர இருமல் கட்டுப்படும். நீரில் சிறிதளவு இஞ்சியை தோல் சீவி நறுக்கி கொதிக்க வைத்திடுங்கள் சுமார் 20 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க வேண்டும். இஞ்சியின் தன்மை முழுவதும் நீரில் இறங்கியதும் நீரின் நிறம் மாறிடும். அப்போது அதனை இறக்கிடலாம். நன்றாக சூடு ஆறியதும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். வேண்டுமென்றால் சிறிதளவு எலுமிச்சை சாற்றையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

உலர் திராட்சை : 50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்துக் அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கிண்ட வேண்டும். பின்பு இந்த கலவையை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும்.

மாதுளம் பழம் : ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது மாதுளம்பழம். இது பழமாக மட்டுமல்ல மருந்தாகவும் செயல்படுகிறது. இருமலைப் போக்க மாதுளம்பழத்தைக் கூட பயன்படுத்தலாம். தொடர் இருமல் இருப்பவர்கள் மாதுளம்பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறு கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

பால் : நன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து அருந்தி வர வறட்டு இருமல் வந்த இடம் தெரியாமல் ஓடி விடும். இதில் சர்க்கரை அல்லது தேனுக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்க்கலாம்.

புதினா : சளியினால் ஏற்ப்பட்ட இருமல் என்றால் இதனை முயற்சித்துப் பாருங்கள் உடனடி நிவாரணம் கிடைக்கும். ஒரு கைப்பிடி அளவு புதினாவை அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள் இவற்றுடன் இரண்டு டீஸ்ப்பூன் மிளகு த்தூள் மற்றும் ஒரு டீஸ்ப்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

பூண்டு : நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை நீக்கும்.

வெங்காயம் : ஒரு வெங்காயத்தை உரித்து நன்றாக நசுக்கிக்கொள்ளவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும். சூடு ஆறிய பிறகு இதனைக் குடிக்கலாம். வெங்காயம் சளி, இருமலுக்கு மிக நல்ல மருந்து. வெங்காயத்தில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் நிறமி, சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மைகொண்டது.

சமையல் : இதைத் தவிர நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டும் இருமலைக் கட்டுப்படுத்தலாம். ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் தேன் கலந்து சாப்பிடலாம். இப்படிச் செய்வதனால் இருவல் குணமாகும். இதே போல மிளகையும் வெல்லத்தையும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதனால் இருமலைக் கட்டுப்படுத்தலாம். வெறும் ஏலக்காயை கடித்து மென்று சாப்பிட்டால் கூட அதிலிருக்கும் அமிலம் இருமல் வருவதை தடுத்திடும். அதிக காரமான உணவு சாப்பிட்டதால் வந்திருக்கும் இருமல் என்றால் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு ஸ்பூன் கற்கண்டு இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் சரியாகும்.483

Related posts

பல் கவனம்… உடல்நலத்துக்கு உதவும்! நலம் நல்லது!

nathan

பெருங்குடல் புற்றுநோயை குணமாக்கும் புதினா

nathan

ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்

nathan

கல்சியக் குளிசைகளும் மேலதிக கல்சியம் சேர்க்கப்பட்ட பால்மா வகைகளும் : வைத்தியர்.சி.சிவன்சுதன்

nathan

சளித்தொல்லையில் இருந்து விடுபட அருமையான வைத்தியம்!

nathan

உங்களுக்கு தலையில் குட்டி குட்டி கொப்புளங்கள் வருதா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா மனிதர்கள் தொட்டாலே கூச்சப்படும் இலைக்கு இவ்வளவு சக்தியா?

nathan

லேப்டாப் கேமராவை மூடி வைக்க மறந்தால் என்ன ஆகும் தெரியுமா?

nathan

அவசியம் படிக்கவும்! திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

nathan