27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
201709271507308106 green peas kachori SECVPF
சிற்றுண்டி வகைகள்

பச்சை பட்டாணி கச்சோரி

தேவையான பொருட்கள் :

மைதா – 1 கப்
கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
ரவை – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/4 கப்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

உள்ளே வைப்பதற்கு…

பச்சை பட்டாணி – 2 1/2 கப்
சீரகம் – 3/4 டீஸ்பூன்
ஓமம் – 3/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 3/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
201709271507308106 green peas kachori SECVPF
செய்முறை :

பச்சை பட்டாணியை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா, கடலை மாவு, ரவை மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், ஓமம், பெருங்காய தூள் சேர்த்து தாளித்த பின் மிளகாய் மற்றும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு சர்க்கரை, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, மசித்து வைத்துள்ள பட்டாணியை சேர்த்து நன்கு கிளறி, இறக்கி தனியாக வைக்க வேண்டும்.

பின் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, அதனை சப்பாத்தி போல் தேய்த்து, நடுவே பட்டாணி கலவையை வைத்து மடித்து, தனியாக தட்டில் வைக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, அந்த கச்சோரிகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான பச்சை பட்டாணி கச்சோரி ரெடி!!!

இதனை விருப்பான சட்னியுடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.

Related posts

சூப்பரான உளுந்தம் மாவு புட்டு

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் பட்டாணி கோப்தா

nathan

கடலைப் பருப்பு போளி

nathan

முட்டை – சப்பாத்தி ரோல்

nathan

சுவையான மீன் கட்லெட்

nathan

மசாலா இட்லி

nathan

பனீர் டிரையாங்கிள்

nathan

சுவையான ஆலு சப்பாத்தி செய்வது எப்படி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ்: உப்பு சீடை

nathan