546756754 46233d6a4d
மருத்துவ குறிப்பு

அரிதிலும் அரிதான மூலிகை ஆடாதொடை

நாம் வசிக்கும் இடத்தை சுற்றிலும், பல்வேறு செடி, கொடிகள், புல், பூண்டுகள் வளர்ந்து செழித்திருப்பதை காண்போம். ஆனால், அவற்றில் அரிதிலும் அரிதான மூலிகைகள் பல உள்ளன என்பதை, சித்தர்கள் கண்டறிந்து பயன்படுத்தியுள்ளனர்.

அதிலொன்று, ஆடாதொடை எனும் அரிய மூலிகை. மனித உடலின் ஆரோக்கியத்துக்கு, சித்தர்கள் பல காயகற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். அவை நம்மை என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வைத்திருக்க உதவுபவை எனலாம். இந்த தாவரம் அதிகளவில் கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது. மனிதர்கள் வாழத்தேவையான அளவு ஆக்சிஜனை வெளியிடுவதால், இதை “ஆயுள் மூலிகை’ என்றும் அழைக்கிறோம். சுவாசம் தொடர்பான நோய்களுக்கு அருமருந்து இது.

ஆடுகள் தொடாத இலை என்பதுவே, ஆடாதொடை என்று மருவி உள்ளது. மனிதனின் ஆரோக்கியத்தை பேணி, ஆயுளை கூட்டும் இந்த மூலிகை, சிறு செடியாகவும் ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இந்தியா முழுவதுமே, குறிப்பாக, நாட்டின் வெப்பமண்டலப் பகுதிகளில் இது அதிகம் வளரும் தாவரமாகும். இலை, கொடி, தண்டு மற்றும் வேர்கள் என, அனைத்து பாகங்களுமே, மருத்துவ குணங்களை கொண்டது தான்.
546756754 46233d6a4d
வேதிப்பொருட்கள்: செய்திறன்மிக்க வேதிப்பொருட்களான வாசிசின், வாசிசினைன், அராக்கிடிக்கிக், பெஹினிக், செரோடிக், லிக்னோ செரிக், லினோலிக் மற்றும் ஒலியிக் அமிலங்கள், ஆடாதொடாவின் விதைகளில் உள்ளன. பெட்டைன், அனிசோட்டைன், இன்டோல் டீ ஆக்ஸி, வாசிசினோன் போன்ற வேதிப்பொருட்கள் இலைகளில் உள்ளன.

பயன்கள்: ஆடாதொடை, நுரையீரல் நோய்களை நீக்க வல்லது. நுரையீரல், உடலின் முக்கியப் பகுதியாகும். இது, நன்கு செயல்பட்டால் தான், ரத்தத்தை சுத்தம் செய்யும். இது காற்றை உள்ளிழுத்து, அதிலுள்ள பிராணவாயுவை பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இதனால், நீண்ட ஆயுள், மனிதர்களுக்கு கிடைக்கும். நுரையீரலை பலப்படுத்துவதில் ஆடாதொடா முக்கிய பங்காற்றுகிறது. இது, நுரையீரல் அறைகளில் படியும் கசடுகளை நீக்கி சுத்தப்படுத்த உதவுகிறது. எனவே தான், இதை, “மரணமாற்று’ மூலிகை என்பர்.
மேலும், நமது உடலில் புழு, பூச்சிகளை அகற்றும். நுண்கிருமிகளை அழிக்கும். கபத்தை வெளியேற்றும். கஷாயம் வைத்து குடிப்பதால், தீராத மார்புச்சளி, மூச்சுத்திணறல், இருமல், ஜலதோஷம், கக்குவான் இருமல் போன்றவை குணமாகும்.

நெஞ்சுச்சளி, அதனுடன் வலியும் இருந்தால், ஆடாதொடை இலையை கஷாயம் செய்து கிராமப்புறங்களில் பயன்படுத்துவர். அதேபோல், உடலில் ஏற்படும் காயங்களுக்கும் ஆடாதொடை இலையுடன் வெற்றிலையை சேர்த்து, மென்று விழுங்கினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இருதயத்துக்கு நல்லது: பெண்களின் கர்ப்பப்பையை பாதுகாக்கும். இலைகளின் சாறு வயிற்றுப்போக்கு, சீதபேதி, சுரப்பிக்கட்டி போன்ற பிரச்னைகளை குணமாக்கும். பெண்களின் மாதவிடாய் கால பிரச்னைகளை, ஆடாதொடை சரி செய்யும். ஆடாதொடை மற்றும் தூதுவளை இலைகளை சம அளவு எடுத்து, காயவைத்து பொடியாக்கி தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், நுரையீரல் உட்பட உடலின் வயிற்றுப்பகுதி, நெஞ்சுப்பகுதிக்கு நல்லது. ஆடாதொடை மற்றும் கண்டங்கத்திரி வேர்களை இடத்து நீர்விட்டு கொதிக்கவிட்டு, குடிநீராக, திப்பிலி பொடி சேர்த்து அருந்தினால், தொண்டை புகைச்சல் சரியாகும்.

Related posts

பெண்களே மாமியாரை இப்படி சமாளியுங்க.!

nathan

சிறுநீரக கற்களை கரைக்கும் வெந்தயம்

nathan

உங்க ஒழுக்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய இந்த பானங்களை சாப்பிட்டா போதுமாம்!பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இடமகல் கருப்பை அகப்படலம் உள்ளவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!!!

nathan

இந்த நீரிழிவு மருந்துகள் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்…

nathan

இன்றைய காலத்தில் மங்கையரை வருத்தும் மாதவிடாய் பிரச்சினை

nathan

கர்ப்பப்பையை அகற்றுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

வைரஸ் காய்ச்சல்களை விரட்டும் நிலவேம்பு குடிநீர்

nathan

உங்களுக்கு சர்க்கரை நோய்க்கான அபாயம் உள்ளதா என்பதை நொடியில் அறிய இங்க அழுத்துங்க…

nathan