பெண்களுக்கு வரும் நுரையீரல் புற்றுநோய் ஆண்களுக்கு வருவதை விட சற்று மாறுபட்டது. பெண்களுக்கு வரும் புற்றுநோயானது நுரையீரலுக்கு வெளிபுறத்தில் ஏற்படும். எனவே இதை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகக் கடினம். மேலும் இது மிகவும் ஆபத்தானது.
ஏனெனில், நுரையீரலின் வெளிபுறத்தில் இது உருவாவதால் மற்ற பாகங்களான எலும்பு, கல்லீரல் போன்றவற்றிற்கு எளிதில் பரவக்கூடும். எனவே, பெணகள் அவர்களது உடலில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களையும் அலட்சியப்படுத்தாமல் கவனிக்க வேண்டும்.
இங்கு பெண்களுக்கான நுரையீரல் புற்றுநோயின் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
உடல் சோர்வு நுரையீரல் புற்றுநோயின் பொதுவான அறிகுறி என்றால் அது உடல் சோர்வு. பொதுவாக உடல் சோர்வு என்பது அதிகப்படியான வேலை பளு மற்றும் அதிக அலைச்சலால் ஏற்படக்கூடும்.
ஆனால், காரணமே இல்லாமல் சோர்வு ஏற்படுகிறது என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படி ஏற்பட்டால் அதனை உடனே கவனியுங்கள்.