29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
மருத்துவ குறிப்பு

விபரீத விளையாட்டு ஆபத்தை ஏற்படுத்தும்

குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு விளையாடாதீர்கள். அது விபரீதமானது. குழந்தைக்கு பேராபத்தை உண்டாக்கும்.

விபரீத விளையாட்டு ஆபத்தை ஏற்படுத்தும்
மனிதனுக்கு சிரசே பிரதானம் என்பார்கள். அதனால்தான் சில சமயம் தலையில் ஏற்படும் சிறு காயம் கூட மனித உயிரைப் பறித்து விடுகிறது. இதற்கு மூளை பாதிக்கப்படுவதே காரணம். ஆனால், இப்படி காயம் எதுவும் இல்லாமல் மூளை பாதிக்கும் பருவங்கள் இரண்டு முறை மனித வாழ்நாளிலே வருவதுண்டு. ஒன்று முதுமைப் பருவம். மற்றொன்று குழந்தைப் பருவம்.

சாதாரணமாக தலையின் மண்டை ஓட்டுக்குள் சிறிதுகூட அங்கும் இங்கும் அசையாதபடி மூளை, கச்சிதமாக பொருந்தியிருக்கும். ஆனால், வயது ஆக ஆக முதுமையின் காரணமாக மூளையின் அளவு கொஞ்சமாக சுருங்கக்கூடும். இந்த நிலையில் கபாலத்துக்குள் மூளை உரசும் சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படி உரசும்போது மூளையின் ரத்தக்குழாயில் கீறல் விழுந்துவிடும்.

அதன்வழியாக கசியும் ரத்தம் உறைந்து சில மாதங்களுக்குள்ளாகவோ, சில நாட்களிலோ, ஏன் சில மணி நேரத்திலோ அல்லது உடனடியாகவோ உயிரைப் பறித்துவிடும். இதைத்தான் மருத்துவர்கள் ‘ஸப்டியூரல் ஹெமடோமா’ என்று அழைக்கிறார்கள்.

நன்றாக பேசிக்கொண்டிருக்கும் முதியவர்கள் திடீரென்று மரணத்தை சந்திப்பது இப்படித்தான். சரி, இப்போது குழந்தைகளுக்கு வருவோம். குழந்தைகள் இதில் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? வயதானவர்களுக்கு மூளை சுருங்குவதால் இந்த பாதிப்பு என்றால் குழந்தைகளுக்கு மூளை முழு வளர்ச்சி அடையாத நிலையில் அதன் மூளை மண்டை ஓட்டுக்குள் உரசும் நிலையிலேயே இருக்கும்.

குழந்தைகளை ஆசையோடு தலைக்கு மேலே தூக்கிப்போட்டு விளையாடும்போது குழந்தை சந்தோஷமாக சிரிக்கும். அதே வேளையில் சில குழந்தைகளுக்கு முதியவர்களுக்கு ஏற்படுவதுபோல் மூளை உரசல் ஏற்பட்டு பாதிக்கப்படும். இதை ‘ஷேக்கிங் ஹெட் இன்ஜுரி’ என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது ‘தலை குலுக்கு காயம்’ என்று பெயர்.

குழந்தைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. குழந்தையை தலைக்கு மேலே தூக்கிப்போட்டு பிடிக்கும்போது குழந்தையின் தலைக்குள் மூளை கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது உடனடியாக வெளியில் தெரிவதில்லை.

சிறிது நேரம் கழித்து குழந்தை அழும். பின்பு தூங்கும். அவ்வளவுதான், அதன்பின் திரும்ப விழிக்காது. அதனால் குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப்போட்டு விளையாடாதீர்கள். அது விபரீதமானது. குழந்தைக்கு பேராபத்தை உண்டாக்கும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! உடலை புழுக்களின்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமா?

nathan

உங்க பற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளை போக்க முயன்று பாருங்கள்!

nathan

குரங்கம்மை எப்படி பரவுகின்றது? அதன் அறிகுறிகள் என்ன?

nathan

இடுப்பு வலியை கட்டுப்படுத்துவது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாமதமாகும் மாதவிடாய்க்கு தீர்வு தரும் கைவைத்தியங்கள்

nathan

தினமும் சிறிது துளசி இலைகளை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் பெறும் நன்மைகள்!

nathan

இரட்டைக் குழந்தைகள் பெத்துக்க ஆசைப்படுறீங்களா?

nathan

சைலன்ட் மாரடைப்பு என்றால் என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் 5 உணவுகளும் இவைதான்..

nathan