பொதுவாகவே அனைவருக்கும் தங்களது துணையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருக்கும். உங்களது துணையை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் அவர்களது கண்களை ஒற்றுப்பார்த்து எல்லாம் கண்டு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் அவர்கள் சாப்பிடும் தட்டு, அவர்கள் என்னென்ன சாப்பிடுவார்கள், அவர்கள் வேகமாக சாப்பிடுவார்களா அல்லது மெதுவாக சாப்பிடுவார்களா என்பதை எல்லாம் கவனித்தாலே போதுமானது.
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது துணையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருக்கும்.
உங்களது துணையை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் அவர்களது கண்களை ஒற்றுப்பார்த்து எல்லாம் கண்டு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் அவர்கள் சாப்பிடும் தட்டு, அவர்கள் என்னென்ன சாப்பிடுவார்கள், அவர்கள் வேகமாக சாப்பிடுவார்களா அல்லது மெதுவாக சாப்பிடுவார்களா என்பதை எல்லாம் கவனித்தாலே போதுமானது.
மெதுவாக சாப்பிடுபவர் :
உங்களது துணை தான் ஒரு கூட்டத்திலேயே வைத்து எப்போதும் கடைசியாக சாப்பிடுபவர் என்றால் நீங்கள் மிகவும் லக்கி என வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு சாப்பிடுபவர்கள் உங்கள் மீது அதிக காதலை வைத்திருப்பார்கள். அவர்கள் நீங்கள் முழுமையாக நம்பலாம். இயற்கையிலேயே பாசமானவர்களாக இருப்பார்கள்.
வேகமாக சாப்பிடுபவர்
உங்களது துணை தான் ஒரு கூட்டத்திலேயே வைத்து மிகவும் வேகமாக சாப்பிடுபவராக இருந்தால், அவர்கள் எப்போதும் தன்னிடம் இருந்து ஏதேனும் ஒரு புதுமையை வெளிப்படுத்த முயற்சி மேற்க்கொள்பவராக இருப்பார். இவர்களுக்குள் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்து கொண்டே இருக்கும். படுக்கையில் பல சாகசங்களை செய்பவராக இருப்பார்.
புதிய உணவுகளை விரும்புபவர்
உங்களது துணை மெனு கார்டில் இல்லாத ஒரு உணவை தேடிக்கண்டு பிடித்து, தானே புதிது புதிதாக டிரை செய்து சாப்பிடுபவர் என்றால், அவர் எப்போது தனது வாழ்க்கையில் ஒரு த்ரில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். காதலில் புதிய அனுபவங்கள் மற்றும் புதிய விஷயங்களை தேடுவார்கள். தனது துணைக்கு பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள்.
கச்சிதமாக சாப்பிடுபவர்கள்
உணவை ஒன்றன் பின் ஒன்றாக கச்சிதமாக சாப்பிடுவார்கள். அதே சமயம் சுவையையும் எதிர்ப்பார்பார்கள். இவர்கள் உணவை மிச்சம் வைக்காமலும் சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். இது போன்று உங்களது துணை இருந்தால், அவர் அனைத்து வேலைகளையும் திட்டமிட்டு செய்யக்கூடியவராக இருப்பார். சிறந்த லவ்வராகவும் இருப்பார்.
எதை சாப்பிடுவது ?
இவர்களுக்கு எந்த உணவை ஆடர் செய்வது என்றே குழப்பமாக இருக்கும். புதுவித உணவுகளை ஒரு முறை சுவைத்து தான் பார்க்கலாமே என்று இருக்கமாட்டார்கள். நன்றாக இல்லை என்றால் என்ன செய்வது என்று ஒரு விதமான உணவை மட்டுமே ஹோட்டல் போனாலும் கூட ஆர்டர் செய்வார்கள். இவர்களை நீங்கள் புரிந்து கொள்வது மிகவும் கடினம். ஒரு சின்ன சண்டை வந்தாலும் கூட அது பல மணி நேரம் நீடிப்பதாக இருக்கும்.