30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கிய உணவு

உலகில் இத்தனை வகையான வாழைப்பழங்களா..? அத்தனையும் நோயை குணமாக்கும்..!

உலகில் மொத்தம் 3000 வாழை வகைகள் இருக்கின்றன.

இந்தியாவில் பரவலாகப் பயிரிடப்படுவது 30! அளவிலும், ருசியிலும், ஊட்டச்சத்திலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை!

01- பூவன் பழம்
அளவில் சிறியவை. ஒரு வாழைக்குலையில் 100 முதல் 150 பழங்கள் உண்டு. மூலநோய்களுக்கு உகந்தது.

02-ரஸ்தாளி
மருத்துவ குணங்கள் குறைவெனினும், ருசியில் உயர்ந்தது. பழங்களைக் கொண்டு தயாரிக்கும் இனிப்புகள், சாலட்களில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. மொந்தம் பழம் உடல் வறட்சியைப் போக்கும்; காமாலையைத் தடுக்கும்.

03-மலை வாழைப்பழம் (பச்சைப் பழம்)
குழந்தைகளுக்கு மிகப்படித்தமான பழம். . இரத்த விருத்தி செய்யும்.

04-நேந்திரம்பழம்
பச்சையாகவோ, அவித்தோ, சிப்ஸ் வடிவிலோ உண்ணப்படுகிறது. குடற்புழுக்கள் நீக்குகிறது. புரதம் அதிகம் உண்டு.

05-கற்பூரவள்ளி பழம்
வாழை ரகங்களிலிலேயே மிக இனிப்பானது. நீண்ட நாட்களுக்கு வைத்து உண்பது கடினம்; கனிந்து முற்றிவிடும்.

06-செவ்வாழை
நோய் எதிர்ப்பு சக்தி; உடலில் தாது பலமும் அதிகரிக்கும். கதளி மற்றும் எலச்சி கதளி ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ளதால் செல்களின் செயல்பாட்டை சீர்செய்கிறது.

07-எலைச்சி
சிறியவையாயினும் மிகச் சுவையானவை; மலச்சிக்கலுக்கு சிறந்தது.

08-பேயன் பழம்
வயிறு மற்றும் குடல் புண்கள் ஆறும். உடல்சூடு தணியும்.

Related posts

whitening skin naturally- வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இத படிங்க…

nathan

முள்ளங்கியை உணவில் சேர்ப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

nathan

அவல் நன்மைகள்

nathan

ரத்த சோகையை போக்கும் பீட்ரூட்.!

nathan

‘நல்ல’ எண்ணெய்

nathan

அரிசி தரும் அரிதான நன்மைகள்

nathan

வாய்வு தொல்லையை போக்கும் நாட்டு மருந்து குழம்பு

nathan

5 நிமிட கஞ்சி….. யாரெல்லாம் தினமும் சாப்பிடலாம்!

nathan

மெழுகில் மூழ்கி எழும் ஆப்பிள்கள்

nathan