31.3 C
Chennai
Saturday, Jul 11, 2026
அசைவ வகைகள்

சுவையான சிக்கன் லெக் ஃப்ரை செய்ய தெரியுமா…!

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
மைதா – 1 1/2 கப்
முட்டை – 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

கோட்டிங் செய்ய:

பிரட் தூள் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதுபோன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் ரெடி.

Related posts

ஓவனில் வறுக்கப்பட்ட சிக்கன்

nathan

சூப்பரான இறால் சுக்கா மசாலா

nathan

காஷ்மீரி ஸ்டைல் மட்டன் ரோகன் ஜோஸ்

nathan

காரமான மசாலா மீன் வறுவல்

nathan

மகாராஷ்டிரா ஸ்டைல் முட்டை குழம்பு

nathan

செட்டிநாட்டு வஞ்சிர மீன் குழம்பு

nathan

(முட்டை) பிரியாணி

nathan

சிக்கன் ரோஷ்ட் சாப்பிட்டதுண்டா இன்றே செய்து சாப்பிடுங்கள்……..

sangika

புதினா சிக்கன் குழம்பு

nathan