31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அசைவ வகைகள்

ஆனியன் சிக்கன் வறுவல்

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை:

சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். காய்ந்த மிளகாயை 2 ஆக கிள்ளி வைக்கவும். சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கால்வாசி வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் இஞ்சிபூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.

பின்பு மசாலாத் தூள்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கி உடனே தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயிலேயே பத்து நிமிடம் வேக விடவும்.

சிக்கன் வெந்து, தண்ணீர் வற்றியதும் நறுக்கி வைத்திருக்கும் மீதி வெங்காயத்தை சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடத்தில் கொத்தமல்லித் தழையை தூவி இறக்கி விடவும்.

குறிப்பு: மேலும் இதனுடன் குடைமிளகாயையும் வெங்காயம் போல் நறுக்கி சேர்க்கலாம். இன்னும் நல்ல சுவையுடன் இருக்கும்.

Related posts

முட்டை குழம்பு வைப்பது எப்படி,ருசியான முட்டை குழம்பு ,egg curry recipe

nathan

செட்டிநாடு முட்டை குழம்பு

nathan

சிக்கன் பிரியாணி-சமையல்

nathan

குளிர்காலத்தில் இவற்றை செய்கிறீர்களா?

sangika

சுவையான கருவாடு பிரட்டல்… நாள் செல்ல செல்ல அதிகரிக்கும் சுவை!

nathan

மஷ்ரூம் ஆம்லெட்

nathan

மெக்சிகன் சிக்கன்

nathan

இரும்புச்சத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை முட்டை பொரியல்

nathan

சூப்பரான பசலைக்கீரை பக்கோடா

nathan