33.9 C
Chennai
Wednesday, Jun 26, 2024
How Weight Loss Works 02 1
எடை குறைய

20 நாட்கள்.. 15 கிலோ எடையை குறைக்க சீரகத்தை இப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

வாசனை மிகுந்த மசாலா பொருட்களில் ஒன்றான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

அதிலும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஆய்வு

தினமும் சீரகத்தை சாப்பிட்டு வருவதால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டு, உடல் எடை குறைகிறது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் சீரகமானது மாரடைப்பைத் தடுத்து, ஞாபக சக்தி மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரித்து, ரத்த சோகை, செரிமானம் போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.
உடல் எடையை குறைக்க சீரகத்தை எப்படி சாப்பிட வேண்டும்?

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து, அதை காலையில் தினமும் குடிக்க வேண்டும்.

சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும்.

ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பல்வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்து, அதில் துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் சாப்பிட வேண்டும்.

Related posts

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் குடிக்கக்கூடாத பானங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த பொருட்கள் உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும்.. ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!

nathan

வயிற்று பகுதியை வலுவடையச்செய்யும் சேர் பயிற்சி

nathan

எடையை குறைக்கும் அற்புத பானம்! எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா?

nathan

உடல் எடை குறைக்க விசித்திரமான டயட்டுகள் – முடிஞ்சா முயற்சி பண்ணுங்க!

nathan

எடையை ஒரே மாதிரி பராமரிப்பவர்களுக்கான‌ 7 நாட்கள் உணவுமுறை திட்டம்

nathan

உடல் பருமனைக் குறைத்திட சில எளிய வழிகள்

nathan

உடல் எடையை வேகமாக குறைப்பதற்கான சில டிப்ஸ்…

nathan

உடல் எடையை குறைக்க அற்புதமான நாட்டு வைத்திய குறிப்புகள்!அற்புதமான எளிய தீர்வு

nathan