What Causes Stretch Marks 1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

தழும்பை மறைய வைக்க

உருளைக்கிழங்கை தோல் சீவி அரைத்து நன்றாக பிழிந்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் பூசுங்கள்.

சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்வதால் தழும்புகள் மறைந்திடும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து அதனை பேஸ்ட்டாக நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பூசினால் இயற்கை ப்ளீச் தயார்.

What Causes Stretch Marks 1இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடங்களில் கழுவிவிடலாம்.
முகத்தில் தோன்றும் பரு அல்லது பருத் தழும்புகள் இருந்தால் வேகவைத்த உருளைக்கிழங்கை அப்படியே முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள். தொடர்ந்து இப்படி ஒரு மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைத்திடும்.

உருளைக்கிழங்கை தோல் சீவி முகத்தில் அரைத்து முகத்தில் பூசினால் சூரிய ஒளியால் ஏற்படம் நிற மாற்றத்தை சரி செய்திடலாம். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம்.

முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க, உருளைக்கிழங்கு பேஸ் ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்திடுங்கள் பின்னர் அதனை முகத்தில் பூசி நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.

கண்களைச் சுற்றி வரும் கருவளையத்தை போக்க, உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து கண்களைச் சுற்றி அப்ளை செய்து அது காய்ந்ததும் கழுவி விடலாம்.

இவை கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும்.
உருளைக்கிழங்கு அத்துடன் வெள்ளரி இரண்டு சேர்த்து அரைத்து முகத்தில் பூசினால் இயற்கை டோனர் போல செயல்படும். இதை வாரம் இரண்டு முறை செய்திடலாம். சரும பொலிவிற்கும் இது வழி வகுக்கும்.
உருளைக்கிழங்கின் தோலை தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும், பின்னர் அந்த தோலை எடுத்து விட்டு அந்த நீரைக்கொண்டு தலைமுடியை அலசினால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.

Related posts

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க மிக எளிதான முறை!..

nathan

ஆரோக்கியமான சருமத்தை பெற – Leaves that gives healthy skin

nathan

இதோ ஈஸியான டிப்ஸ். முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென மாறவேண்டுமா?

nathan

தோல் மற்றும் கூந்தல் அழகுக்கு வெல்லத்தை பயன்படுத்துவது எப்படி?

nathan

தாய்ப்பால் நன்றாகச் சுரக்க மிளகை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

கடலை மாவை எப்படி சருத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வறண்டு இருக்கும் சருமத்தை சரிசெய்வதற்கான சில வழிகள்!

nathan

Beauty tips.. சருமத்தை பளபளப்பாக்கும் பன்னீர் ரோஜா..

nathan

சருமத்தை பாதுகாக்க கற்றாழையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்

nathan