சரும பராமரிப்பு

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வினிகர்

சருமத்தை அழகை பராமரிப்பதில் வினிகர் முக்கிய பங்கு வகிக்கிறது. வினிரை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகம் பொலிவாததோடு, பருக்கள், வறட்சி, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கிவிடும். எனவே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், வினிகரைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு சிறிய கப் வினிகரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்றமானது நீங்கும். ஒரு சிறிய டேபிள் ஸ்பூன் வினிகரை, முகம் கழுவும் போதோ அல்லது குளிக்கும் போதோ நீரில் கலந்து செய்தால், சருமம் நன்கு மென்மையாவதோடு, பொலிவோடும் இருக்கும். எண்ணெய் பசை சருமத்தினருக்கு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெயானது இருக்கும்.

எனவே ஒரு கப் நீரில் பாதிக்கு பாதி வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கழுவி வந்தால், சருமத்திலிருந்து வெளிவரும் அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, முகம் அழகாக அளவான எண்ணெயோடு வறட்சியின்றி காணப்படும். அதிகப்படியான வெயிலால் சருமத்தில் ஏற்படும் வேனிற்கட்டியை போக்குவதில் வினிகர் உதவியாக உள்ளது.

மேலும் வினிகர் சருமத்தில் பிஎச் தன்மையை சீராக தக்க வைத்து, சருமத்தை குளிர்ச்சியுடன் வைக்கிறது. பாதத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை போக்குவதற்கு வினிகரை நீரில் கலந்து, அதில் கால்களை 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கால்களில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும்.

குதிகால் வெடிப்பால் அவஸ்தைப்படுபவர்கள், மெருகேற்ற உதவும் கல் கொண்டு, பாதங்களை தேய்த்து, பின் வினிகர் நீரில் பாதங்களை ஊற வைக்க வேண்டும். இதனால் பாத வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் போய்விடும்.

3 ஸ்ட்ராபெர்ரியை மசித்து, அதில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலந்து, 2 மணிநேரம் ஊற வைத்து, இரவில் தூங்கும் முன் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து, காலையில் கழுவினால், கரும்புள்ளிகள் அறவே போய்விடும்.istockphoto 6737996 beautiful woman receiving facial treatment at a health spa 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button