மருத்துவ குறிப்பு

இதில் நீங்கள் எந்த வகை தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்கள்? அதற்கு காரணம் என்ன தெரியுமா?

ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு நாளில் ஒரு கட்டத்தில் ஒருமுறையாவது தலைவலியை சந்திப்போம். இப்படி தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம், கண் பிரச்சனைகள், சப்தம், சளி போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆனால் சிலர் நாள்பட்ட தலைவலியால் மிகவும் அவஸ்தைப்படுவார்கள். அதில் மிதமான தலைவலி முதல் தாங்க முடியாத அளவிலான தலைவலி வரை இருக்கும். அதற்கு காரணம் என்னவென்று தெரியாமலும் இருப்பார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா தலைவலியில் நான்கு வகைகள் உள்ளன. இங்கு அந்த நான்கு வகை தலைவலிகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

டென்சன் தலைவலி தற்போது எதற்கெடுத்தாலும் டென்சன் அடைவோர் அதிகம். இப்படி அடிக்கடி டென்சன் அடையும் போது பலர் தலைவலியை சந்திப்பார்கள். ஏனெனில் டென்சன் அடையும் நெற்றிப்பகுதியில் உள்ள தசைகள் மிதமானது முதல் கடுமையானது வரை சுருங்குகிறது.

ஒற்றைத் தலைவலி ஒற்றைத் தலைவலி என்பது தலையின் ஒரு பக்கம் மட்டும் தாங்க முடியாத அளவில் வரும். இது ஏற்படுதற்கான மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்றவற்றால் மூளையில் அசாதாரண செயல்பாடுகள் தூண்டப்பட்டு, மூளையில் உள்ள இரத்த நாளங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.

சைனஸ் தலைவலி சைனஸ் தலைவலியானது கன்னங்கள், கண்களுக்கு மேல் மற்றும் கீழே வலியை சந்திக்க நேரிடும். சைனஸ் பிரச்சனைகள் இருந்தால், சைனஸ் தலைவலிடிய அடிக்கடி சந்திக்க நேரிடும்.

க்ளஸ்டர் தலைவலி க்ளஸ்டர் தலைவலி என்பது சிறிதும் மாற்றம் இல்லாமல் ஒரே ஒரு கண்ணில் மட்டும் கடுமையான வலி ஆகும். இந்த க்ளஸ்டர் தலைவலி இருந்தால் ஒரே இடத்தில் அமர முடியாது. அந்த அளவில் மிகவும் பயங்கரமாக இருக்கும்.

தலைவலிக்கு பரம்பரையும் காரணமா? ஆம், தலைவலியில் குறிப்பாக ஒற்றைத் தலைவலிக்கு பரம்பரையும் காரணம். குடும்பத்தில் தாய், தந்தை இருவருக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தால், கட்டாயம் அந்த ஒற்றைத் தலைவலி 70% அவர்களின் குழந்தைக்கும் வருவதற்கு வாய்ப்புள்ளது. அதுவே தாய், தந்தையில் ஒருவரின் குடும்பத்தில் ஒற்றைத்தலைவலி பிரச்சனையால் யாரேனும் அவஸ்தைப்பட்டால், அது 25-50% வரும் அபாயம் உள்ளது.

Related posts

இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்

nathan

தனியாக வெளியூர் செல்லும் பெண்களின் கவனத்திற்கு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த காளான் சாப்பிட்டா பெண்களுக்கு குழந்தை சீக்கிரம் உண்டாகுமாம்…

nathan

effects of angry …உங்களுக்கு கோபம் அதிகமா வருமா?

nathan

மரு, கட்டியை குணப்படுத்தும் இரணகள்ளி

nathan

உயர் இரத்த அழுத்த பிரச்சனை வரக்கூடாதா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஆஸ்துமாவை நெருங்க விடாத இந்த அற்புத ஜூஸ் பற்றி தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா கருவில் இருப்பது என்ன குழந்தை என்று தெரிய அந்த காலத்தில் செய்த வினோதமான சோதனைகள் ?

nathan

தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணி பெண்கள் ஐஸ் க்ரீம் சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா?

nathan