வீட்டில் பார்த்து செய்யும் திருமணங்களில் பெண்கள் தனது கணவனை திருமணத்திற்கு முன்பும் காதலிப்பதில்லை, கணவன் செய்யும் சில கொடுமைகளால் திருமணத்திற்கு பின்னரும் காதலிக்க முடிவதில்லை.
பெண்கள் தன் கணவனை ஏமாற்றுவதற்கான காரணங்கள்
பெண்கள் தன் கணவனை சில மன உளைச்சலால் தான் ஏமாற்றுகிறார்களாம். அவர்கள் மனதில் உண்டாகும் வலி, ஏன்தான் இவரை திருமணம் செய்தோமோ என்று சிந்திக்க வைக்கிறது. வீட்டில் பார்த்து செய்யப்படும் திருமணங்களில் பெண்கள் தனது கணவனை திருமணத்திற்கு முன்பும் காதலிப்பதில்லை, கணவன் செய்யும் சில கொடுமைகளால் திருமணத்திற்கு பின்னரும் காதலிக்க முடிவதில்லை.
சில பெண்கள் பணம், வீட்டில் இருப்பவர்களின் கட்டாயம் அல்லது குழந்தை போன்ற தவறான காரணத்திற்காக திருமணம் செய்துகொள்கிறார்கள். இதனால் தான் தம்பதிகளுக்குள் காதல் ஏற்படுவதில்லை. ஒரு முழுமையற்ற உணர்வு வாழ்க்கையில் தோன்றுகிறது.
தவறான உறவில் ஈடுபடும் பெண்களால், எனக்கு இந்த உறவில் விருப்பம் இல்லை, எனது வாழ்க்கை வெறுமையாக இருக்கிறது என தனது கணவனிடம் வெளிப்படையாக சொல்ல முடியாது. எந்த ஆண் தன் மீது பாசம் காட்டுகிறானோ அவனை நோக்கி அவள் ஈர்க்கப்படுகிறாள்.
சில பெண்கள் தங்களது முன்னால் காதலன், கணவனால் உண்டாகும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பான் என நம்பி தனது முன்னால் காதலனுடன் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் இந்த தொடர்பு பிரச்சனையை அதிகப்படுத்துமே தவிர குறைப்பதில்லை என்பதை அவர்கள் உணருவதில்லை.
கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனைகள் வரும் போது சில புதிய உறவுகள் இடையில் வந்துவிடுகின்றன. புதிதாக திருமணமான தம்பதிகளுக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பாடுகள் ஏற்படுவது சாதாரணம் தான். இதனை வெளி ஆட்களுடன் பகிர்ந்து கொண்டு உறவில் சிக்கல்களை உருவாக்க வேண்டாம்.
நீங்கள் உங்களது தவறை உணர்ந்து திருந்திவிட்டால், உங்கள் கணவரிடம் இருந்து உடனடி மன்னிப்பை எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் செய்த தவறு மற்றவர்களை விட உங்களது கணவரை தான் அதிகமாக பாதிக்கும். எனவே அவர் உங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள சிறிது காலம் ஆகும்.
உங்களது கணவர் உங்களை மன்னிக்கலாம் அல்லது மன்னிக்காமலும் போகலாம். அவர் மன்னிக்கும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம். நீங்கள் ஏதேனும் விபரீதங்கள் செய்து அவரை மிரட்டுவது, கோபப்படுவது கூடாது. உங்கள் கணவர் உங்களை ஏமாற்றியிருந்தால் உங்களது மனநிலை எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள்.
ஒருவேளை உங்களது கணவர் உங்களை மன்னித்து ஏற்றுக்கொண்டால், இனிமேல் அவரை ஏமாற்றக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் ஒருமுறை அவரது நம்பிக்கையை நீங்கள் இழந்தால் உங்களை யாருமே மன்னிக்கமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சில பெண்கள் பல ஆண்டுகளாக காதலித்த காதலனை ஏதோ சில காரணங்களுக்காக பிரிந்துவிட்டு, தனது திருமணத்திற்கு பின்னர் கணவருடன் உண்டாகும் பிரச்சனைகள் காரணமாக, தனது முன்னால் காதலனுடன் கணவருக்கு தெரியாமல் தொடர்பில் இருக்கிறார்கள். இது தன் கணவருக்கு செய்யும் துரோகம் என்று அவர்கள் உணருவதில்லை.
உங்களது வாழ்க்கை துணையை விட ஒரு பாதுகாப்பான உறவு உங்களுக்கு யாரும் இல்லை என்பதை உணருங்கள். பிறர் மீது காட்டும் அன்பை உங்களது கணவர் மீது காட்டுங்கள். அவர் அன்பே இல்லாதவராக இருந்தாலும் கூட உங்களது அன்புக்கு அவர் எதிர் அன்பை காட்டுவார்.