31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சரும பராமரிப்பு

எப்பவுமில்லாம உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா? இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க!!

சருமம் எப்போதும் பளிச்சென்று இருக்காதுதான். பருவ மாற்றம், வயது, உபயோகிக்கும் அழகு பொருட்கள் என ப்லவகைகளில் சருமம் பாதிக்கப்படும்.
ஆனால் நீங்கள் உங்கள் இழந்த சருமத்தை மீட்டெடுக்க அற்புதமான இயற்கை வழிகள் உண்டு. அம்மாதிரியான ஒரு குறிப்புதான் இது. உபயோகித்துப் பாருங்கள்.

தேவையானவை :
எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்
முட்டையின் வெள்ளைக் கரு- 1
தேங்காய் எண்ணெய் – 1 1/2 ஸ்பூன்
தேன் – அரை ஸ்பூன்

செய்முறை :
முதலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக பிரித்தெடுத்து நன்றாக நுரைக்கும்படி அடித்துக் கொள்ளுங்கள்.

அதில் தேன், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை மேலே குறிப்பிட்ட அளவு கலந்து கொண்டால் ஃபேஸ் மாஸ்க் ரெடி.

இந்த கலவையை உபயோகப்படுத்துவதற்கு முன் நீங்கள் முக்கியமாய் செய்ய வேண்டியது, முகத்தை கழுவுவது. முகத்தை கழுவி சுத்தமான துணியில் லேசாக ஒத்தி எடுக்க வேண்டும்.

பின்னர் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி அரை மணி நேரம் காய வைக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். முகம் மிகவும் மிருதுவாகும். சுருக்கங்கள் மறையும். முகம் பளபளப்பாக ஜொலிப்பதை கண்கூட உணர்வீர்கள்.

Related posts

ஆலிவ் ஆயிலை இவ்வாறு முகத்தில் அப்ளை பண்ணுங்கள்… அதிக பலன் கிடைக்கும்…

sangika

இயற்கை அழகு குறிப்புக்கள்

nathan

குளிக்கும்போது அவசியம் பின்பற்றவேண்டிய 9 விஷயங்கள்!

nathan

மெனிக்கியூர்

nathan

‘டிரை பிரஷ்ஷிங்’ பயன்படுத்துவது பற்றித் தெரியுமா?

sangika

வெள்ளையாவதற்கு சந்தனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் எனத் தெரியுமா?

nathan

உங்களை அழகாக்கும் ரகசியம் காபிக் கொட்டைகளிடம் இருக்கிறது.

nathan

உடலிற்கு புத்துணர்வை தர இந்த எண்ணெய்களை வாரம் 1 முறை உபயோகிக்கலாம்.!!

nathan

ஃபேஷியல் எண்ணெய்களை சருமத்திற்குப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்..

nathan