29.1 C
Chennai
Friday, Aug 15, 2025
201706291523136218 corn cheese uttapam SECVPF
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கான கார்ன் – சீஸ் ஊத்தப்பம்

குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு விருப்பமான சீஸை வைத்து சூப்பரான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கான கார்ன் – சீஸ் ஊத்தப்பம்
தேவையான பொருட்கள் :

அரைப்பதற்கு :

புழுங்கல் அரிசி – 4 கப்,
முழு உளுந்து – 1 கப்,
துவரம் பருப்பு – கால் கப்,
வெந்தயம் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

ஊத்தப்பத்துக்கு :

வெங்காயம் – 2
ப.மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 6 பல்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
துருவிய சீஸ் – 1 கப்
கார்ன் – அரை கப்
எண்ணெய் – தேவைக்கு
கேரட் – 3

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்

* கார்னை வேக வைத்து கொள்ளவும்.

* கேரட், இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

* அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத்தை 4 மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு முதல் நாளே அரைத்து தேவையான உப்புக் கலந்து, புளிக்க விடவும்.

* தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு குழிக்கரண்டியால் கனமாக தோசை வார்த்து, மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கார்ன், கேரட் தூவவும்.

* கடைசியாக துருவிய சீஸை தூவி சுற்றி எண்ணெயை விட்டு, மூடி வைத்து, குறைந்த தணலில் வேக விடவும்.

* வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

* சூப்பரான கார்ன் – சீஸ் ஊத்தப்பம் ரெடி. 201706291523136218 corn cheese uttapam SECVPF

Related posts

ஜாமூன் கோப்தா

nathan

சூப்பரான டிபன் பாஜ்ரா பூரி

nathan

ஆரஞ்சு கீர் செய்முறை விளக்கம்

nathan

ஹேவ் எ ஹெல்தி அண்ட் ஹேப்பி ஃபேமிலி!

nathan

உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு கீமா கபாப்

nathan

கேழ்வரகு – சிறுதானிய குணுக்கு

nathan

கொய்யா இலை பஜ்ஜி

nathan

கற்பூரவள்ளி இலை பஜ்ஜி

nathan

நெல்லிக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan