35.8 C
Chennai
Thursday, May 29, 2025
ஆரோக்கிய உணவு

கார்ன் பாலக் கிரேவி

கார்ன் பாலக் கிரேவி

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை – 4 கட்டு
வேக வைத்த சோளம் – 1 கப்
புளிக்காத தயிர் – 1/2 கப்
இஞ்சி பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
வெங்காயம் – 1
உலர்ந்த வெந்தய இலை – 1 டேபிள் ஸ்பூன்
மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு

செய்முறை:

• ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• முதலில் பசலைக்கீரையை சுடுநீரில் சிறிது நேரம் ஊற வைத்து, நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி, மிக்ஸியில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.

• பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

• அரைத்து வைத்துள்ள பசலைக்கீரையை சேர்த்து கிளறி விட வேண்டும்.

•  பின்னர் அதில் வேக வைத்துள்ள சோளம் சேர்த்து, உப்பு மற்றும் மாங்காய் தூள் சேர்த்து சிறிது நேரம் கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்.

•  அடுத்து அதில் புளிக்காத தயிர் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.

• சுவையான கிரேவியானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் எலுமிச்சை சாறு, உலர்ந்த வெந்தய இலை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். கலவையானது ஒரு பதத்திற்கு வரும் போது, அதனை இறக்கினால், சுவையான கார்ன் பாலக் கிரேவி ரெடி!!!

* சுவையான மலாய் கார்ன் பாலக் இந்த மலாய் கார்ன் பாலக் ரெசிபியானது சப்பாத்தி, நாண் அல்லது ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

Related posts

ரத்தசோகைக்கு என்னென்ன சாப்பிட வேண்டும்?” ~ பெட்டகம்

nathan

சுவையான சத்தான ராகி கருப்பட்டி பணியாரம்

nathan

பக்கவாதத்தை தடுக்கும் உணவுப் பழக்கங்கள்

nathan

சொக்லேட் சாப்பிட்டால் இதய நோயை தடுக்கலாம்.

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்…!!

nathan

உங்களுக்கு தெரியுமா காலையில் சீரகத் தண்ணீரை குடித்தால் இவ்வளவு நன்மையா..?

nathan

டயட்டில் இருப்போருக்கான… ஓட்ஸ் உப்புமா

nathan

ஜவ்வரிசிக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா?

nathan

ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்

nathan