புதினா கீரையைச் சாப்பிட்டு வந்தால், அஜீரண கோளாறுகள் நீங்கும். இன்று புதினாவை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
அஜீரண பிரச்சனையை குணமாக்கும் புதினா சூப்
தேவையான பொருட்கள் :
புதினா இலை – 1 கப்,
வேகவைத்து மசித்த துவரம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிது,
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
தேங்காய்ப்பால் – 1/4 கப்,
பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
சீஸ் துருவல் – 1 டீஸ்பூன்.
செய்முறை :
* மிக்சியில் புதினா இலை, பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு விழுது போட்டு வதக்கிய பின்னர் அரைத்த விழுது, மசித்த பருப்பு போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.
* எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை, சீஸ் துருவலைத் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
* சூப்பரான சத்தான புதினா சூப் ரெடி.
* குறிப்பு: புதினா இலையை நன்கு வதக்கியும் செய்யலாம். வதக்கி அரைத்தும் சூப்பில் சேர்க்கலாம்.