28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
09 1483953205 5 oatmealandcurdfacemask
முகப் பராமரிப்பு

ஏழே நாட்களில் முகத்தில் உள்ள சுருக்கங்களை முழுமையாகப் போக்க வேண்டுமா?

முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக உள்ளதா? இந்த சுருக்கங்கள் உங்களுக்கு முதுமைத் தோற்றத்தைத் தருகிறதா? முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க பல்வேறு காஸ்மெடிக் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறீர்களா? இருப்பினும் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லையா?

அப்படியெனில் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள நேச்சுரல் மாஸ்க்கை முகத்திற்கு போடுங்கள். இதனால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் ஒரே வாரத்தில் மறைவதைக் காணலாம். சரி, இப்போது ஏழே நாட்களில் சரும சுருக்கங்களைப் போக்கும் அந்த மாஸ்க்கை எப்படி செய்வதென்றும், பயன்படுத்துவதென்றும் காண்போம்.

ஸ்டெப் #1 முதலில் ஒரு பல் பூண்டு எடுத்து தோலுரித்து, நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2 பின் அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஸ்டெப் #3 அடுத்து அதோடு 1 டேபிள் ஸ்பூன் க்ளே பவுடர் சேர்த்து கலந்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #4 பின் முகத்தில் உள்ள அழுக்கை, பாலில் நனைத்த பஞ்சுருண்டை பயன்படுத்தி துடைத்து எடுத்துவிட வேண்டும்.

ஸ்டெப் #5 பிறகு தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை முகத்தில் தடவி 20-30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், ஒரே வாரத்தில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து, சருமம் இளமையுடன் மிளிர்வதைக் காணலாம்.

09 1483953205 5 oatmealandcurdfacemask

Related posts

இதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்!…

sangika

ஒரே ஒரு டூத் பிரஷ் வச்சு எப்படியெல்லாம் உங்களை அழகு படுத்திக்கலாம்?

nathan

அழகிய முகத்தை தரும் கேரட்.

nathan

முகம் எப்போதும் பொலிவுடன் தோற்றமளிக்க முக்கியமானவை

nathan

முகம் பளபளக்க புரூட் மசாஜ்

nathan

கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை பிரகாசமாக்கும் அழகு குறிப்புகள்…!!

nathan

வறண்ட சருமமோ, எண்ணெய் பசை சருமமோ கவலை வேண்டாம்..சமைக்கும் பொருட்களே நம் சருமத்தை பாதுகாக்கின்றன…

sangika

உங்களுக்கு இரண்டே வாரத்தில் கரும்புள்ளிக்கு குட்-பை சொல்லணுமா?அப்ப இத படிங்க!

nathan

இளமையுடன் இருக்க… எலுமிச்சை!….

sangika