36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

புது அம்மாவிற்கான அன்னாசி ஸ்க்ரப் !!

பெண்களின் அழகு எல்லா சமயத்திலும் ஒரே மாதிரி வைத்திருப்பது எளிதல்ல. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு மாதிரி அவர்களின் அழகு பிரதிபலிக்கும். காரணம் அவர்களின் உடலமைப்பு.

பொதுவாகவே மாதவிடாய் சமயத்தில் பெண்களின் அழகு அதிகரிக்கும். சருமம் பளபளப்பாக, புது தேஜஸை தரும் விதமாக மின்னும். சரியாக மாதவிடாய் முடிந்து 10 நாட்களுக்கு பிறகு சருமம் பொலிவில்லாமல் தொய்ந்து போவது போலிருக்கும். இது எல்லாமே ஹார்மோன் செய்யும் மாயம்தான்

அதேபோல், குழந்தை பிறந்ததும் சம நிலையற்ற ஹார்மோன்களால சிலருக்கு முகம் உழுவதும் கருமைடைந்துவிடும். இதற்கு காரணங்கள் இல்லை. கழுத்துப் பகுதியும் முகமும் கருப்பாகி, முகப்பருக்கள் திடீரென் அதிகரித்திற்கும்.

வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு எண்ணெய் சருமமாக மாறும். இப்படி அழகே மாறிவிட்டதே என கவலைப் படாதீர்கள்.

அந்த நேரத்தில் தாய்மை என்ற அழகை விட வேறோன்றும் பெரிதில்லை. அந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் இழந்த சருமத்தை மீண்டும் எளிதில் பெற உதவுகிறது இங்கே கூறப்பட்டுள்ள அழகுக் குறிப்பு.

அன்னாசி ஸ்க்ரப் : அன்னாசி துண்டுகள் – 1 கப் வாழைப்பழம் – அரை துண்டு சர்க்கரை – 1 கப் தேங்காய் எண்ணெய் – 1 கப் ரோஜா இதழ் – சில

அன்னாசியை மிக்ஸியில் அரைத்து அதனுடன் வாழைப்பழத்தையும் சேர்த்து மசித்துக் கொள்ளுங்கள். இதனுடன் சர்க்கரை, தேங்காய் என்ணெய் கலந்து நன்றாக கலக்கி அதன் மேல் ரோஜா இதழை தூவி வைத்துக் கொள்ளுங்கள்.

குளிப்பதற்கு முன் இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து 10 நிமிடம் ஊற விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.

இதனை தொடர்ந்து உபயோகித்து வந்தால், உடலில் திடீரென உண்டான கருமை மறைந்து மிருதுவாக மாறும். செய்து பாருங்கள். புதிய அம்மாவிற்கான அழகு உங்கள் தோற்றத்திலும் தெரியும்.

Related posts

தழும்புகளில் உபயோகப்படுத்த வேண்டியவை மற்றும் கூடாதவை!..

sangika

கரும்புள்ளிகளை நீக்கும் துளசி

nathan

முகம் கழுவும் போது செய்ய வேண்டியவை

nathan

பெண்கள் அழகிற்கு முகத்தை பொலிவாக்கும் பாசிப்பயறு மாவு!

nathan

அடுக்களையிலேயே அழகாகலாம்! – 2

nathan

வாரத்துக்கு 2 முறை உப்தான் ஃபேஸ் பேக் போடுவதால் பெறும் நன்மைகள்

nathan

இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

வீட்டிலேயே நாமாகவே ஃபேஷியல் செய்யும் முறை

nathan

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க…

nathan