79698
சிற்றுண்டி வகைகள்

சத்தான சுவையான பருப்புத் துவையல்

சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் சாப்பிட இந்த துவையல் நன்றாக இருக்கும். இந்த பருப்புத் துவையலை செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் – 1/2 டீஸ்பூன்,
துவரம் பருப்பு – 5 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 1,
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்,
நெய் – 1/4 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக வறுத்து ஆற விடவும்.

* ஆறவைத்தபொருட்களுடன் சிறிது தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும்.

* சூப்பரான பருப்புத்துவையல் ரெடி.

* இந்த துவையல் பருப்பு சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.

– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.79698

Related posts

காரசாரமான வரகரசி – மிளகு மினி இட்லி

nathan

அவல் கிச்சடி

nathan

சுவையான தயிர் வடை செய்வது எப்படி

nathan

பொங்கல் ஸ்பெஷல்: சேமியா இனிப்பு பொங்கல்

nathan

ஷாஹி துக்ரா

nathan

சூப்பரான ப்ராக்கோலி பஜ்ஜி

nathan

மட்டன் கிரேவி (தாபா ஸ்டைல்)

nathan

சுவையான இறால் வடை செய்வது எப்படி

nathan

ஓமவல்லி இலை பஜ்ஜி

nathan