24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
1482840652 7526
சைவம்

உடலுக்கு சக்தியை கொடுக்கும் கொள்ளு உருண்டை குழம்பு….

தேவையான பொருட்கள்:

கொள்ளு – 200 கிராம்
காய்ந்த மிளகாய் – 6
வெந்தயம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 10 பல்
வெங்காயம் – 1
துவரம்பருப்பு – 4 டீஸ்பூன்
கறுப்பு உளுந்து – 4 டீஸ்பூன்
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

துவரம்பருப்பு, கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்து உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு கடாயில் எண்ணெய்விட்டு அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எடுத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இதனை இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுத்து கொள்ளவேண்டும்.

பிறகு கடாயில் எண்ணெய்விட்டு, கடுகு, வெந்தயம், வெங்காயம், பூண்டு, தாளித்து புளியைக் கரைத்து உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைத்து குழம்பாக தயாரிக்கவும். உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுத்து, குழம்பில் போட்டு இறக்கவும். சுவையான மிகுந்த கொள்ளு உருண்டை குழம்பு தயார்.1482840652 7526

Related posts

பன்னீர் மாகன் வாலா

nathan

உருளைக்கிழங்கு புலாவ்

nathan

சுவையான உருளைக்கிழங்கு கிச்சடி

nathan

பரோட்டா!

nathan

சைனீஸ் ஃபிரைடு ரைஸ்

nathan

வயிற்று புண்ணை குணமாக்கும் மணத்தக்காளிக்கீரை பொரியல்

nathan

ஐயங்கார் புளியோதரை

nathan

சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

nathan

வரகரிசி தக்காளி சாதம்

nathan