ஆரோக்கிய உணவு

சத்து நிறைந்த அவகோடா டோஸ்ட்

டயட்டில் இருப்பவர்கள், வயதானவர்கள், இளம் தலைமுறையினர் அனைவருக்கும் இந்த டோஸ்ட் மிகவும் நல்லது. இன்று இந்த டோஸ்ட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த அவகோடா டோஸ்ட்
தேவையான பொருட்கள் :

பழுத்த அவகோடா – ஒன்று,
வெங்காயத்தாள் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று ,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கோதுமை பிரட் ஸ்லைஸ் – 4,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயத்தாள், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அவகோடாவின் சதை பகுதியை மட்டும் எடுத்து தனியாக வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் அவகோடா, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து மசிக்கவும்.

* பிரட்டின் மீது வெண்ணெய் தடவி வைக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பிரட் ஸ்லைஸ்களை டோஸ்ட் செய்து எடுக்கவும்.

* டோஸ்ட் செய்த பிரெட்டின் மீது மசித்த அவகோடா கலவையைத் தடவிப் பரிமாறவும்.

* சத்து நிறைந்த அவகோடா டோஸ்ட் ரெடி.

Related posts

திராட்சை இந்த பொருட்களுடன் கலந்து பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆறிப்போன சுடுநீரை சூடுபடுத்தி குடிக்கலாமா?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

இந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும்

sangika

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தனியா பொடி

nathan

இதெல்லாம் குழந்தைகளின் எலும்புகளின் வளா்ச்சியை பாதிக்கும் தெரியுமா?

nathan

அதிமதுரம் சாப்பிடும் முறை

nathan

உங்களுக்கு தெரியுமா பிராய்லர் கோழி சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்!!!

nathan

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றணுமா? பெண்களே…. இதோ எளிய நிவாரணம்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…புரோட்டீன் பவுடரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan