27.1 C
Chennai
Saturday, May 24, 2025
1481717651 039
சாலட் வகைகள்

ஆலு பன்னீர் சாட் செய்வது எப்படி….

தேவையானவை:

பன்னீர் துண்டுகள் – அரை கப்,
சிறிய உருளைக்கிழங்கு துண்டுகள் – அரை கப் (வேக வைத்தது) ,
வெங்காயம் – ஒன்று,
பட்டாணி, கேரட் துண்டுகள் – தலா கால் கப்,
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
அஜினமோட்டோ – ஒரு சிட்டிகை,
சாட் மசாலா பவுடர் – கால் டீஸ்பூன்,
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பனீர் துண்டுகளை போட்டு வதக்கி, லேசான பிரவுன் கலர் வரும் வரை சூடுபட கிளறி எடுக்கவும். உருளைக்கிழங்கு துண்டுகளையும் வதக்கி எடுக்கவும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி நறுக்கிய வெங்காயம், பட்டாணி, கேரட் துண்டுகள், இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, அஜினமோட்டோ சேர்த்துக் கிளறவும். எல்லா காய்களும் வெந்ததும் பன்னீர், உருளைக்கிழங்கு துண்டுகள், சாட் மசாலா சேர்த்துக் கலக்கவும். எலுமிச்சைச் சாறு விட்டு கலந்து இறக்கிவிடவும். கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி,
கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.1481717651 039

Related posts

புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் – ஆரஞ்சு சாலட்

nathan

காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்

nathan

கொய்யா பழ துவையல்

nathan

கேரட் சாலட் செய்வது எப்படி

nathan

காளான் தயிர் பச்சடி : செய்முறைகளுடன்…!

nathan

வெள்ளரிக்காய் – தக்காளி சாலட்

nathan

சுவையான நுங்கு ஃப்ரூட் சாலட்

nathan

முளைகட்டிய பச்சைப் பயறு – பப்பாளி சாலட்

nathan

தக்காளி சாலட்

nathan