achchaaru
சாலட் வகைகள்

அச்சாறு

தேவையான பொருள்கள்
* பச்சைமிளகாய் – 250 கிராம்
* வெங்காயம் – 250 கிராம்
* பப்பாசிக்காய் – 125 கிராம்
* போஞ்சிக்காய்(பீன்ஸ்) – 125 கிராம்
* கேரட் – 125 கிராம்
* வினிகர் – 3 கப்
* செத்தல் மிளகாய் – 5
* கடுகு – ஒரு மேசைக்கரண்டி
* உள்ளி – 5 பல்
* இஞ்சி – 2 இன்ச் நீளத்துண்டு ஒன்று
* உப்புத்தூள் – தேவையான அளவிற்கு
* மிளகுத்தூள் – தேவையான அளவிற்கு
* பெருங்காயம் – ஒரு துண்டு

செய்முறை
* கிரைண்டரில் செத்தல்மிளகாய், கடுகு ஆகியவற்றை ஒரு மேசைக்கரண்டி வினிகர் சேர்த்து மென்மையாக அரைக்கவும்.
* அரைத்த பின்பு அதனுடன் உப்பு, உள்ளி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து விழுது போல அரைக்கவும்.
* வெங்காயத்தை தோலுரித்து துப்பிரவாக்கி கழுவி துடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
* போஞ்சிக்காயை(பீன்ஸ்)துப்பிரவாக்கி கழுவி துடைத்து நீளவாக்கில் வெட்டி பின்பு (2″-3″) துண்டுகளாக குறுக்காக வெட்டி ஒருபாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
* இன்னொரு பாத்திரத்தில் பப்பாசிக்காயின் தோலை சீவி கழுவி சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
* இன்னொரு பாத்திரத்தில் பச்சைமிளகாயின் காம்பை அகற்றி விட்டு அதனை கழுவி நீளவாக்கில் அதன் ஒரு பக்கத்தில் கீறி அதன் உள்ளிருக்கும் விதைகளை அகற்றி வைக்கவும்.
* பின்பு அடுப்பில் மண்சட்டியை வைத்து அதில் அரை கப் வினிகரை ஊற்றி அதனுடன் விதை நீக்கிய பச்சை மிளகாயை போட்டு அவிய விடவும்.
* பச்சைமிளகாய் அவிந்து வினிகர் வற்றியதும் அதிலிருக்கும் பச்சைமிளகாயை வேறு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
* பின்பு அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி வெங்காயத்தை போட்டு அவித்து வினிகர்வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
* அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி கேரட்டை போட்டு அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
* அதே சட்டியில் அரை கப் வினிகரை ஊற்றி போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு அவித்து வினிகர் வற்றியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
* பின்பு அதே சட்டியில் அரைகப் வினிகரை ஊற்றி பப்பாசிக்காயை போட்டு அவித்து வேறு ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
* அதன் பின்பு மிகுதியுள்ள வினிகரை சட்டியில் விட்டு அதனுள் அரைத்தவற்றை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
* கொதித்த பின்பு அதில் பெருங்காயம், அவித்த பச்சைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கிய பின்பு அவித்த பப்பாசிக்காயையை போட்டு நன்றாக கலக்கவும்.
* பின்பு அவித்த கேரட்டை போட்டு நன்றாக கலக்கிய பின்பு அவித்த வெங்காயத்தை போட்டு நன்றாக கலக்கவும்.
* பின்பு அவித்த போஞ்சிக்காய்(பீன்ஸ்) போட்டு நன்றாக கலக்கிய பின்பு அதனுடன் உப்புத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
* அதன் பின்பு மண்சட்டியை அடுப்பிலிருந்து இறக்கி அதை ஆற விடவும்.
* அச்சாறு ஆறிய பின்பு கண்ணாடி போத்தலில் போட்டு மூடி வைக்கவும்.
* அதன் பின்பு அச்சாறு தயராகிவிடும் அதை தேவையான நேரங்களில் எடுத்து பரிமாறலாம்.
achchaaru

Related posts

காளான் தயிர் பச்சடி : செய்முறைகளுடன்…!

nathan

உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் வெஜிடபிள் சாலட்

nathan

இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan

வாழைத்தண்டு – மாதுளை ரெய்தா

nathan

குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி

nathan

சுவையான ஃப்ரூட் சுண்டல்!….

sangika

ருசியான அனார்கலி சாலட்!…

sangika

கிரீன் சாலட் வித் ஃப்ரெஞ்ச் டிரெஸ்ஸிங் (ஃபிரான்ஸ்)

nathan

காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்

nathan