201705061102227123 banana stem Sprouted green lentils salad SECVPF
சிற்றுண்டி வகைகள்

வாழைத்தண்டு – முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்

வாழைத்தண்டு, முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்து செய்யும் இந்த சாலட்டை காலை அல்லது மாலை வேளையில் சாப்பிட உகந்தது. இன்று இந்த சாலட் செய்முறையை பார்க்கலாம்.

வாழைத்தண்டு – முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்
தேவையான பொருட்கள் :

வாழைத்தண்டு – 50 கிராம்
முளைகட்டிய பச்சைப் பயறு – 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு சிட்டிகை
மிளகு தூள் – தேவைக்கு
கொத்தமல்லித்தழை – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வாழைத்தண்டை பொடியாக நறுக்கி நாரை எடுத்து விட்டு வேக வைத்து கொள்ளவும்.

* முளைகட்டிய பச்சைப் பயறை வேக வைத்து கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்றாகக் கிளறி பரிமாறவும்.

* சத்து நிறைந்த வாழைத்தண்டு – முளைகட்டிய பச்சைப் பயறு சாலட் ரெடி.201705061102227123 banana stem Sprouted green lentils salad SECVPF

Related posts

வடகறி–சமையல் குறிப்புகள்!

nathan

பீட்ரூட் சப்பாத்தி

nathan

தீபாவளி ஸ்பெஷல்: ஆப்பிள் பேரீச்சம்பழ கீர்!

nathan

பிரெட் பஜ்ஜி செய்ய வேண்டுமா…?

nathan

சுவையான சத்தான கம்பு தோசை

nathan

காஞ்சிபுரம் இட்லி

nathan

வெல்லம் கோடா

nathan

சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பானிபூரி சாட்

nathan