36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

ஜவ்வரிசி – இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்

மாலையில் குழந்தைகளுக்கு ஜவ்வரிசி வைத்து ஊத்தப்பம் செய்வது கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஜவ்வரிசி – இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்
தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி – 4 கப்,
உளுந்து – ஒரு கப்,
ஜவ்வரிசி – கால் கிலோ,
வெங்காயம் – 2,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
இட்லி மிளகாய் பொடி – தேவையான அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும்.

* மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும்.

* வாணலியில் எண்ணெயை சூடாக்கி. கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும்.

* தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இட்லி மிளகாய் பொடி தூவி, சுற்றி எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

* சூப்பரான ஜவ்வரிசி – இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம் ரெடி.

குறிப்பு: விருப்பப்பட்டால், கேரட் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

Related posts

சுவையான ஹைதராபாத் கராச்சி பிஸ்கட்

nathan

ஆரஞ்சு கீர் செய்முறை விளக்கம்

nathan

சுவையான சத்தான முடக்கத்தான் கீரை அடை

nathan

அரிசி வடை

nathan

பீச் மெல்பா

nathan

பொங்கல் ஸ்பெஷல்: பால் பொங்கல்

nathan

டிரை ஃப்ரூட் தோசை

nathan

சுவையான ஓட்ஸ் மிளகு அடை

nathan

சத்து நிறைந்த வாழைப்பூ பருப்பு மசியல்

nathan