சிற்றுண்டி வகைகள்

சொஜ்ஜி

என்னென்ன தேவை?

பச்சரிசி – 1 கப்,
பாசிப்பருப்பு – 1/4 கப்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் – 3 கப்,
காய்ந்தமிளகாய் – 4,
உப்பு – தேவைக்கு.

தாளிக்க…

கடுகு – 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 கொத்து,
எண்ணெய் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் வாசனை வரும்வரை வறுக்கவும். பிறகு அரிசியையும், பாசிப்பருப்பையும் கழுவி, 3 கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும், சீரகம் போட்டு சற்று சிவந்ததும் கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இவற்றை ஊறவைத்த அரிசி, பருப்பு, உப்புடன் சேர்த்து கலந்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேக வைத்து சூடாக பரிமாறவும்.

Related posts

சுவை மிகுந்த மீன் கட்லெட்

nathan

கல்மி வடா

nathan

வெங்காயத்தாள் பராத்தா

nathan

சிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி?

nathan

சுவையான… கீமா மொமோஸ்

nathan

சிறுதானிய போண்டா தினை – சோளம்

nathan

பிரெட் வெஜ் ஆம்லெட்

nathan

சூப்பரான காளான் பஜ்ஜி

nathan

கடலைப்பருப்பு ஸ்வீட் கேசரி

nathan