அவசர உலகில் மனஅழுத்தம் நம் அனைவருக்குமே அழையா விருந்தாளி. அழுத்தும் பணிச் சுமை, பரபரப்பான வாழ்க்கை, உறவுகளில் பிரச்னை. எனப் பல்வேறு காரணங்களால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதைக் கவனித்து, ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தாவிட்டால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயநோய் என வரிசையாக பாதிப்புகள் நம்மைத் தாக்கும். மனஅழுத்தம் தவிர்க்க யோகா, தியானம் செய்வதைப் போல, அதிக ஆற்றல் கொண்டது ரெஃப்ளெக்ஸாலஜி.
இந்தமுறையில், கை, கால் உட்தசைகளில் கட்டை விரல்களால் அழுத்தம் கொடுக் கப்படும். கை, காலில் உள்ள நரம்புகள், உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளின், நரம்புப் பகுதிகளின் சங்கமமாகும். இந்தப் புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து தகுந்த விதத்தில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் மனம் அமைதிய டையும். மனஅழுத்தத்தின் பாதிப்புகள் குறையும். மனஅழுத்தத்துக்கு மட்டுமல்ல. உடலில் உள்ள குறைபாடு களைக் கண்டறியவும் அவற்றைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
யார் இந்த சிகிச்சையைச் செய்துகொள்ளலாம்?
எந்த வயதினரும் ரெஃப்ளெக்ஸாலஜி செய்யலாம். நீண்ட நேரம் நின்றபடி வேலை செய்பவர்கள், காலில் பித்த வெடிப்பு உள்ளவர்கள், தலைவலி, கால் வலி போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் ரெஃப்ளெக்ஸாலஜி செய்வதால், நல்ல பலன் கிடைக்கும். அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இதைச் செய்யலாம்.
பலன்கள்
*கை, கால் வலி, உடல் வலி, அசதி, சோர்வு நீங்கும். உடல், மனம் புத்துணர்வு பெறும்.
*ஆழ்ந்த தூக்கம் வரும்.
*சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் கை, கால் வலி, வீக்கத்துக்கு நல்ல நிவாரணம் தரும்.
*கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கால் வீக்கத்தைப் போக்கும்.
*மனஅழுத்தத்துக்கான ஹார்மோன் சுரப்பைக் குறைக்கும். மன அமைதி கிடைக்கும்.
*ரத்த ஓட்டத்தைச் சீர் செய்து, அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
*ஆஸ்துமா உள்ளவர்களுக்கு, மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்தி, சுவாசிக்கும் திறனை மேம்படுத்தும்.
*சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்யும்.