33.8 C
Chennai
Sunday, Jun 16, 2024
77p1
மருத்துவ குறிப்பு

மாதவிடாய்க் கோளாறு நீக்கும் நத்தைச் சூரி! – நாட்டு வைத்தியம்

புல் – பூண்டு, செடி, கொடி, மரம் என இயற்கையின் கொடைகள் அனைத்துமே மனித இனத்துக்கு ஏதோ ஒருவகையில் பயன்படக்கூடியவையே. வெறுமனே பயன்படக்கூடியவை என்று சொல்வதைவிட இவற்றில் பல, நோய் தீர்க்கும் குணம் கொண்டவையாக உள்ளன. இதனால்தான் சித்தர்கள் இவற்றை மூலிகைகளாகக் கொண்டு பலவிதமான நோய்களைக் குணப்படுத்தி இருக்கின்றனர். அந்த வகையில் நாம் இங்கே நத்தைச் சூரி என்ற ஒரு மூலிகையைப் பார்ப்போம்.

நத்தைச் சூரி என்றதும் சிலர் ஏதோ ஒரு உயிரினத்தின் பெயர் என்று நினைப்பார்கள். இது அரிய வகை மூலிகைளில் ஒன்றாகும். இந்த மூலிகை பல்வேறு நோய்களைக் குணமாக்கப் பயன்பட்டதால், சித்தர்கள் இதை மகாமூலிகை என்று அழைத்தனர். நத்தைச் சூரிக்கு குழி மீட்டான், தாருணி, கடுகம், நத்தைச்சுண்டி, தொலியாகரம்பை என பல பெயர்கள் உண்டு.
இது, பூண்டு வகையைச் சேர்ந்த தாவரமாகும். இதன் விதை, வேர் ஆகியவை மருத்துவக் குணம் கொண்டவை. நத்தைச் சூரியின் விதையை, லேசாக வறுத்துப் பொடியாக்கி, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்கவைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து, காலை, மாலை அருந்தி வந்தால், உடல் சூடு தணிவதுடன், உடலில் உள்ள தேவையற்ற, வேதிப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகக் கல்லடைப்பை தடுக்கும். மேலும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். நத்தைச் சூரியின் விதையைப் பொடித்து, தினமும் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால், சீதபேதி மற்றும் வயிற்றோட்டம் சரியாகும்.
நத்தைச் சூரியின் விதைகளை, சட்டியில் போட்டு, பொன் வறுவலாக வறுத்து, பொடித்து, நீரில் கலந்து கொதிக்க வைத்து. சுண்டவைத்து, அத்துடன் ஒரு டம்ளர் பசும்பால் கலந்து. காலை, மாலை என இரண்டுவேளை வீதம் தொடர்ந்து குடித்து வந்தால், ஊளைச் சதை குறையும். ஆண், பெண் இருவருக்கும் வரக்கூடிய வெள்ளை நோய், வெட்டை நோய் குணமாகும். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் வரக்கூடிய அதிக உதிரப்போக்கைத் தடுப்பதோடு, வெள்ளைப்படுதலைக் குணமாக்கும்.
10 கிராம் நத்தைச் சூரி வேரை, காயவைத்து, பொடியாக்கி, பசும்பாலில் கலந்து, கொதிக்க வைத்து அருந்தி வந்தால், தாய்ப்பால் பெருகும். இதேபோல் ஆண்கள் அருந்தி வந்தால் ஆண்மை பலம் அதிகரிக்கும். நத்தைச் சூரியின் சமூலத்தை (முழு தாவரம்) அரைத்துப் பற்று போட்டு வந்தால், கல் போன்ற வீக்கமும் கரைந்து ஓடிவிடும்.77p1

Related posts

மெத்தையை விட கட்டாந்தரையில் படுப்பது ஏன் ஆரோக்கியமானது என்று தெரியுமா?

nathan

உடல் துர்நாற்றத்தால் அவதியா? இதோ வீட்டு வைத்தியம்

nathan

உங்க உடல் எடையை குறைக்க உணவு உட்கொள்ளலை நிர்வகிப்பது எப்படி ?

nathan

விபத்தை உருவாக்கும் ‘வேகத்தடைகள்’

nathan

நீரிழிவு நோய் வராமல் இருக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்

nathan

ஆஸ்துமா நோய் குணமாக ஓமியோபதி மருத்துவம்

nathan

மழை காலத்திற்கான சில ஆயுர்வேத சுகாதாரக் குறிப்புகள்!!!

nathan

இதயநோய்க்கு குட்பை சொல்லனுமா? இதை மட்டும் செய்தாலே போதும்

nathan

எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட குப்பைமேனி மூலிகை !!

nathan