27.9 C
Chennai
Monday, Nov 18, 2024
201704241104501283 stimulate appetite herbal soup SECVPF
சூப் வகைகள்

பசியை தூண்டும் மூலிகை சூப்

பசி எடுக்காதவர்கள், அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகை சூப்பை தினமும் செய்து குடிக்கலாம். இந்த சூப்பை குடித்த 1 மணி நேரத்திலேயே நல்ல பலன் கிடைக்கும்.

பசியை தூண்டும் மூலிகை சூப்
தேவையான பொருட்கள் :

மிளகு – 20 கிராம்,
சீரகம் – 20 கிராம்,
கண்டதிப்பிலி, அரிசித் திப்பிலி – தலா 10 கிராம்,
ஓமம் – 20 கிராம்,
துளசி உலர்ந்தது – ஒரு கைப்பிடி,
உலர்ந்த கற்பூரவல்லி இலை – ஒரு கைப்பிடி,
பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
கறுப்பு உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

201704241104501283 stimulate appetite herbal soup SECVPF
செய்முறை :

* அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் ஒன்றின் பின் ஒன்றாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.

* அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து அதில் கலந்து நன்றாகக் கொதித்து 1 கப்பாக வற்றியது இறக்கி பருகவும்.

* சூப்பரான மூலிகை சூப் தயார்.

* இதை அருந்திய 20 நிமிடத்தில் கபகபவெனப் பசிக்கும். அஜீரண பிரச்சனை தீரும்.

* இந்த பொடியை செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

Related posts

சுவையான ஓட்ஸ் – ப்ரோக்கோலி சூப்

nathan

உடல் எடையை குறைக்கும் வாழைத் தண்டு சூப்

nathan

நூல்கோல் சூப்

nathan

பரங்கிக்காய் சூப்

nathan

சளி தொல்லையை போக்கும் நண்டு சூப்

nathan

பாகற்காய் – பாசிப்பருப்பு சூப்

nathan

கேரட் தக்காளி சூப்

nathan

சத்து நிறைந்த வேர்க்கடலைக் கூழ்

nathan

டயட்டில் இருப்பவர்களுக்கு தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி?

nathan