31.9 C
Chennai
Wednesday, May 28, 2025
மருத்துவ குறிப்பு

ஆரோக்கியமா இருக்கணுமா… குடும்பத்தோட நேரம் செலவழியுங்க…

நல்ல உணவுமுறை. உடற்பயிற்சி. போதுமான தூக்கம். உடல்நலத்தைப் பாதுகாக்க இவையெல்லாம் அவசியம் என்பது நமக்குத் தெரியும்தான். ‘இந்தப் பட்டியலில் நாம் கற்பனை செய்தும் பார்த்திராத பல சின்னச்சின்ன விஷயங் களும் உண்டு. அவற்றில் ஒன்று குடும்பத்துடன் நேரம் செலவழித்தல்’ என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அலபாமா, டெக்ஸாஸ், கரோலினா என அமெரிக்கா முழுவதும் சாம்ராஜ்யம் பரப்பியிருக்கும் சவுத் யுனிவர்சிட்டி இதுகுறித்த ஆய்வு செய்துள்ளது. குடும்பத்துடன் நேரம் செலவிடும்போது உறவுகள் மேம்படுவதைப் போலவே, உடல்நலமும் மேம்படுகிறது என்று இதில் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆய்வின் ஒரு பகுதியாக, இரவு உணவை குடும்பத்துடன் சாப்பிடுகிறவர்களையும், தனியாக உண்கிறவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டார்கள்.

இதில் குடும்பத்துடன் இரவு உணவு உண்கிற குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியமாகவும், மன அழுத்தம் குறைந்தவர்களாகவும் காணப்பட்டார்கள். இதையே சவுத் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் தங்களது பரிந்துரையாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். Parents magazine இதழும் இந்த விஷயத்தை சிறப்புக் கட்டுரையாக முன்வைத்திருக்கிறது. குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது, குழந்தை களுடன் விளையாடுவது போன்ற செயல்கள் பெற்றோர், குழந்தைகள் இரண்டு தரப்புக்குமே நல்லது செய்யும்.

முக்கியமாக, குழந்தைகளின் கல்வித்திறனை அதிகரிப்பது உட்பட அவர்களின் எதிர்காலத்துக்கும் பல வழிகளில் நல்லது செய்யும் என்று சொல்லியிருக்கிறது. பெற்றோருடன் நெருக்கமாக வளர்கிற குழந்தைகள் போதைப் பழக்கங்களுக்கு எளிதில் ஆட்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அவசர வாழ்க்கைதான். சம்பாதித்தாக வேண்டும்தான். டென்ஷன்தான்…

காரணம் ஆயிரம் இருந்தாலும் குடும்பத்துக்கென்று கொஞ்சமாவது நேரம் ஒதுக்குங்கள். அது உடல்நலம், மனநலம் மட்டுமின்றி நீங்கள் நினைத்திராத எண்ணற்ற பலன்களையும் தரும் என்று ஆய்வின் முடிவாகக் கூறுகிறார்கள். அதற்காக, குடும்பத்துடன் நேரம் செலவழிக்கிறேன் பேர்வழி என்று டிவி, செல்போன், லேப்டாப் என்று நேரத்தை வீணடிக்காதீர்கள். Quality time என்று சொல்கிற அளவுக்கு குடும்பத்துடன் செலவழிக்கிற நேரம் முழுமையானதாக இருக்கட்டும்!

Related posts

கரப்பான் புண்களை ஆற்ற மருதாணிப்பூ!

nathan

தாய் மற்றும் மனைவிக்கு பிடித்த மாதிரி எப்படி நடந்துகொள்வது உங்களுக்குத் தெரியுமா?

nathan

எச்சரிக்கை! சிறுநீரகம் மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்

nathan

ஈரலில் கொழுப்பு (ஈரல் நோய் ) பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை

nathan

அழகுத் தோட்டம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முதல் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது இரண்டாவதாக கருவுற்றால் என்னென்ன பிரச்சனைகள்?

nathan

உங்கள் குழந்தையோடு விளையாட நேரம் ஒதுக்குங்கள்

nathan

பெண்களின் நோய் தீர்க்கும் சதகுப்பை

nathan

பெண்களுக்கு மல ட்டுத் தன்மை ஏற்படுவது ஏன்? ஆய்வில் அதி ர்ச்சி தகவல்!

nathan