பீட்ரூட்டிற்கு கருஞ் சிவப்பு நிறத்தைக் கொடுப்பவை பீட்டா சையனின்கள். சரி. நமக்கு என்ன தரும்?
பீட்ரூட், செல்களை வலுவூட்டும். இரத்த நாளங்களில் படிந்துள்ள, கெட்ட கொழுப்புக்களைக் கரைத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். பீட்ரூட்டில் உள்ளது கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ப்ளேவோனாய்டுகள்.கர்ப்பிணி பெண்களுக்கு அவசியமான, போலிக் அமிலம், ரத்த சோகையைப் போக்கும் இரும்புச்சத்து, எலும்புகளுக்கு தேவையான, கால்சியத்தைத் தரும் சிலிகா, அதிகம் உள்ளது.