sl4727
சிற்றுண்டி வகைகள்

மோர் ஓட்ஸ் கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

ஓட்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
மோர் – 4 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 4 இலை,
இடித்த மிளகு,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஓட்ஸ், அரிசி மாவு, மோர், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் ஊறவிடவும். மிளகு சேர்த்து தேவையென்றால் தண்ணீரும் சேர்த்து தோசைமாவு பதத்தில் ஊறவிடவும். எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும். அதில் ஊற வைத்த ஓட்ஸ் கலவையை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கட்டி ஆகும் வரை கிளறவும். அடுப்பை அணைத்து விட்டு இறக்கி ஈர கைகளால் கொழுக்கட்டை பிடித்து ஆவியில் 3-4 நிமிடங்கள் வேக வைத்து சூடாக சட்னியுடன் பரிமாறலாம்.sl4727

Related posts

பருப்பு போளி

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கஸ்தா நம்கின்

nathan

இட்லி உப்புமா செய்வது எப்படி

nathan

உருளைக்கிழங்கு மசாலா போண்டா செய்முறை விளக்கம்

nathan

தூதுவளை மசாலா தோசை

nathan

சுவையான அடை தோசை

nathan

மசாலா பூரி செய்வது எப்படி?

nathan

சாக்லெட் சுவிஸ் ரோல்

nathan

தக்காளி பஜ்ஜி

nathan