நெஞ்செரிச்சல் என்பது தற்போது சாதாரண விஷயமாகி விட்டது. வேளாவேளைக்கு சாப்பிடாததும் முறையற்ற உணவும் தான் நெஞ்செரிச்சல் ஏற்பட காரணம். சாப்பிடும் உணவை செரிக்க வைப்பதற்காக வயிற்றில் அமிலம் சுரக்கிறது.
அப்படி சரியான உணவை எடுத்துக்கொள்ளாத போது இரைப்பையில் சுரக்கும் அமிலம் அதிகமாக சுரக்கத் தொடங்கும். அப்போது தேங்கி இருக்கும் அமிலமானது வயிற்றெரிச்சலை தோற்றுவிக்கும்.
இந்த நிலையில் இறுக்கமான உடை அணிந்து இருந்தாலோ அல்லது அதிக காரம் மிகுந்த உணவை சாப்பிடும்போதோ அந்த அமிலமானது உணவுக் குழாய் வழியாக மேலே சென்று, நெஞ்சில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
இதை ஒருசில உணவுகள் மூலம் சரிசெய்ய முடியும்.
இதுதவிர சரியான நேரத்தில் சாப்பிடுவது, குறைந்தது 8 மணிநேரம் தூங்குவது, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றை பின்பற்றுவதால் சரி செய்யலாம்.
நெஞ்செரிச்சலை சில பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் குறைக்கலாம். கால்சியம் அதிகம் உள்ள உணவுகளும் நெஞ்செரிச்சலை சரிசெய்யும்.
ஆப்பிளில் கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் அல்லது நெஞ்சில் எரிச்சல் ஏற்படும் போது, ஆப்பிளை சாப்பிட்டால், எரிச்சலைத் தடுக்கலாம்.
தினமும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும்.
இதனால் எரிச்சலை ஏற்படுத்தும் அமிலமானது கரைந்து நீர்த்துப் போய்விடும். அதுமட்டுமின்றி, தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் சீராக இருக்கும். லிகோபாக்டர் பைலோரியா எனும் பாக்டீரியம், எரிச்சலை ஏற்படுத்தும் அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கிறது. எனவே கற்றாழை ஜூசை குடித்து வந்தால், அந்த பாக்டீரியா அழிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் தடைபடும்.
கடல் உணவுகளில் டாரின் என்ற சத்து அதிகம் உள்ளது. இதனை சாப்பிட்டால், எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தை குறைக்கும்.
அதுமட்டுமல்ல, இது கண்களுக்கும் சிறந்தது. வாழைப்பழத்தில் ஆன்டாசிட்கள் உள்ளன. எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது. கால்சியம் உடலில் அதிகம் இருந்தால், எரிச்சலை உண்டாக்கும் அமிலம் சுரப்பதை தடுக்கும். எனவே கால்சியம் உற்பத்திக்கு உதவும் பால் சாப்பிடுவது நல்லது.
எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தின் உற்பத்தியை குறைப்பதில் அதிமதுரம் சிறந்தது. அதுமட்டுமன்றி இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் கொழுப்புகள் தங்குவதைத் தடுக்கும்.
இப்படி சில உணவுகள் மூலமும் நெஞ்செரிச்சலை குணப்படுத்தலாம்.