என்னென்ன தேவை?
வரகரிசி மாவு – ஒரு கப்
பச்சரிசி மாவு – அரை கப்
பொட்டுக்கடலை மாவு, கறுப்பு எள் – தலா 2 டீஸ்பூன்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வரகரிசி மாவு, பச்சரிசி மாவு, பொட்டுக் கடலை மாவு, லேசாக வறுத்த கறுப்பு எள், உப்பு இவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய், உருக்கிய வெண்ணெய் மற்றும் சூடான தண்ணீர் சேர்த்து சரியான பதத்தில் பிசையுங்கள். பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள். வெண்ணெய் அதிகமாகச் சேர்த்தால் முறுக்கு நீளமாக வராமல் உடைந்துவிடும். அதனால் அளவோடு சேருங்கள்.