31.3 C
Chennai
Monday, Jun 17, 2024
Weight2BLoss
எடை குறைய

உடல் எடையை குறைக்கணுமா ? – எளிய வழி

உடல் உழைப்பு குறைந்து விட்ட இந்நாளில் உடல் பருமன் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குழந்தைகள் அதிகளவில் விரும்பி உண்ணும் பாஸ்ட் புட் ரகங்கள் பீட்சா, பர்கர் முதலியனவை கொழுப்பை அதிகரிக்க செய்கின்றன. பிராய்லர் கோழிகள் வேறு வயதை மீறிய உடல் வளர்ச்சியை கொடுக்கின்றன. காலம் கடந்தப் பின்பு ஏறிவிட்ட உடல் எடையை எப்படி குறைப்பது என தடுமாறி விடுகிறார்கள். சில எளிய முறைகளை தொடர்ச்சியாக கையாண்டால் போதும் கணிசமான அளவு எடை குறைந்துவிடும்.

* தினமும் சிறிது தூர நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

* தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* பட்டினி இருப்பதால் உடல் எடை நிச்சயமாக குறையாது , மாறாக உடல் பலவீனமாவது தான் மிச்சம். பசி எடுக்கும் போது மட்டும் உணவு உண்ணவேண்டும். ஒரே நேரத்தில் மொத்தமாக உண்பதைவிட சிறிது சிறிதாக ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து வேளை சாப்பிடலாம்.

* மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

*நொறுக்குத் தீனிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* இனிப்பு வகைகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

* எண்ணையில் வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்த்து, வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

* முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெள்ளைப்பகுதியை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

* செயற்கைக் குளிர்பானங்களுக்கு நமக்கு நாமே தடை விதித்துக்கொள்ள வேண்டும்.

* பழங்கள் சாப்பிடலாம்.

* அவரை, பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், காலி பிளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் இரவு உணவுடன் 200 கிராம் அளவுக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப்பயறு, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

* கைக்குத்தல் அவல், முழுக்கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.

*உணவில் பூண்டு வெங்காயம் இஞ்சி சுரைக்காய் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

* வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு போன்றவற்றை அருந்தி வரலாம்.

*சோம்பு போட்டு காய்ச்சிய தண்ணீரை குடித்து வந்தால் எடை குறையும்.

* கொழுப்புச் சத்துள்ள உணவுப்பொருட்களைத் தவிர்த்தல் மிகவும் நல்லது.

* வீடு துடைப்பது, கழுவது , துணி தோய்ப்பது போன்ற வேலைகளுக்கு வேலைக்காரர்கள், இயந்திரங்களிடம் விடாமல் நீங்களே செய்ய வேண்டும். இதை விட சிறந்த உடற்பயிற்சி வேறில்லை.

* அசைவ விரும்பிகள், அவற்றின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். பொரிப்பது, வறுப்பது தவிர்த்து, தந்தூரி வகைக்கு மாறலாம்.

அனைத்தையும் விட மிக முக்கியமான ஒரு சிறந்த பயிற்சி வீட்டுத் தோட்டம் போடுவது. சிறு சிறு தொட்டிகள் முதல் பெரிய பிளாஸ்டிக் தொட்டிகள் வைத்து மாடித் தோட்டம் போடுவது இன்று பரவலாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான காய்கறிகள், கீரைகளை கைகெட்டும் தூரத்தில் பறித்துக் கொள்ளலாம் என்பதுடன் மனதிற்கு உற்சாகம் கொடுத்து உடலுக்கு ஆரோக்கியத்தையும் சேர்த்தே கொடுக்கிறது.

உடல் எடை குறைய இது ஒரு சிறந்த வழிமுறை.
Weight%2BLoss

Related posts

வேகமாக உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிகள்!

nathan

உடல் எடையை மிக வேகமாக குறைக்க வெல்லம்!….

sangika

சாத்துக்குடி ஜூஸ் குடித்து உடல் எடையை குறைப்பது எப்படி???

nathan

உடல் எடையை குறைக்க எதை, எப்படி, எவ்வளவு, எப்போது சாப்பிட வேண்டும்?

nathan

உடல் எடையை குறைக்க பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

உடல் எடையால் கஷ்டப்படுகிறீர்களா? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!!

nathan

எடையை குறைக்க வைக்கும் இந்திய உணவுகள்

nathan

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் குடிக்கக்கூடாத பானங்கள்

nathan

தினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்!

nathan