25.9 C
Chennai
Friday, Mar 13, 2026
armpit lumps 02 1480661565
ஆரோக்கியம் குறிப்புகள்

அக்குளில் வரும் வலிமிக்க கட்டிகளைப் போக்க சில டிப்ஸ்…

சிலருக்கு அக்குளில் வலிமிக்க கட்டிகள் வரும். இந்த கட்டிகள் நிணநீர் முடிச்சுக்களில் ஏற்படும் வீக்கத்தால் வருபவை. நிணநீர் முடிச்சுக்களில் வீக்கம் ஏற்பட்டால், உடல் கிருமிகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பதைக் குறிக்கும். இருப்பினும் சில நேரங்களில் அது புற்றுநோயையும் குறிக்கும்.

அதற்காக அக்குளில் வரும் கட்டிகள் அனைத்துமே புற்றுநோய் கட்டிகள் என்று அர்த்தமில்லை. அக்குளில் வரும் வலி மிகுந்த கட்டிகளைப் போக்க சில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றை பின்பற்றினால், எவ்வித பக்கவிளைவும் இல்லாமல், வலியைக் குறைத்து கட்டிகளைப் போக்கலாம்.

சுடுநீர் சிகிச்சை சுடுநீரை துணியில் நனைத்துப் பிழிந்து, கட்டிகள் இருக்கும் அக்குளில் 10-15 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், அக்குள் கட்டிகள் விரைவில் நீங்கும்.

மசாஜ் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை விரலில் தொட்டு, கட்டிகள் உள்ள அக்குளில் மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்தால், அக்குளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, வீக்கம் குறைந்து சரியாகும்.

வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை தினமும் உட்கொண்டு வர வேண்டும். சருமத்தில் பிரச்சனைகள் வருவதற்கு குறிப்பிட்ட வைட்டமின் குறைபாடுகள் தான் காரணமாக இருக்கும். அதிலும் சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் ஈ மிகவும் முக்கியமானது. ஆகவே இதனை ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தால், சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அகலும்.

தர்பூசணி தர்பூசணியை ஜூஸ் செய்து தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்தத்தை சுத்தம் செய்து, வீக்கத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, வீக்கத்தைக் குறைக்கும்.

எலுமிச்சை சாறு எலுமிச்சை சாறு மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, காட்டன் பயன்படுத்தி கட்டிகள் உள்ள இடத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்து வர வலிமிக்க கட்டிகள் நீங்கும்.

ஜாதிக்காய் ஒரு கப் நீரில் 1/2 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இதனால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.

வெங்காயம் வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதனை தினமும் பலமுறை அக்குளில் தடவி வர வேண்டும். இதனால் அக்குளில் இருக்கும் கட்டிகள் மறையும்.

மஞ்சள் மஞ்சள் பொடியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வர, விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

armpit lumps 02 1480661565

Related posts

அரிசி உடம்புக்கு நல்லதா?

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தை நன்றாக தூங்க இந்த விஷயங்களை எல்லாம் செய்யுங்க..!

nathan

வெயிலுக்கு குளுகுளு டிப்ஸ்

nathan

மூலிகை பற்பசையின் நன்மைகள்

nathan

ஆண்களே! இதோ ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள்!!!

nathan

எப்பவும் குளிர்ற மாதிரியே இருக்கா?…இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

ஆரோக்கிய வாழ்விற்கு பயன்தரும் கீரை வகைகள்:-

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சில வழிமுறைகள்

nathan

முதல் குழந்தையை பெற்ற தாய்மார்கள் செய்யும் தவறுகள்

nathan