39.1 C
Chennai
Friday, May 31, 2024
honeybee genehanson 14359
ஆரோக்கிய உணவு

ஒரு டீஸ்பூன் தேன் உருவாக்க, தேனீக்கள் படும் கஷ்டம் இவ்வளவா?!

தேனீக்களை பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம். அதன் வாழ்க்கை முறையைப் பற்றியும் வேலையைப் பற்றியும் பெரும்பாலோனோர்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தேனீக்களின் வாழ்க்கை மிகவும் கட்டுப்பாடானது. அதனால்தான், தனது வேலையைச் சரியான முறையில் செய்து கொண்டே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அது பெண்தேனீக்களின் ஆதிக்கம் நிறைந்த உலகம். ஆம், ராணித் தேனீதான், ஒரு தேன்கூட்டினையே நிர்வகிக்கும் தலைவி. கட்டளைகளை இட்டு மற்ற தேனீக்களை வேலை வாங்குவதே ராணித்தேனீயின் வேலை. வேலைக்காரத் தேனீக்கள் காலம் முழுவதும், ராணித்தேனீயின் கட்டளைகளுக்கு அடிபணிந்தே ஆக வேண்டும். வேலைக்காரத் தேனீக்கள் மட்டுமல்ல, ஆண்தேனீக்களும் ராணித்தேனீக்களுக்கு அடிபணியும் சேவகன்தான். தோரணையிலும் ஆண்தேனீயைவிட பெண்தேனீ மெஜாரிட்டிதான், கூடவே வடிவத்திலும் ஆண்தேனீயைவிட பெரியது.
honeybee genehanson 14359
ராணித்தேனீ தேன்கூட்டினை கண்காணிப்பது, நிர்வகிப்பது மற்றும் முட்டையிடுவது ஆகிய செயல்களை மட்டும்மேற்கொள்ளும். ராணித்தேனீ தவிர மற்ற தேனீக்களின் ஆயுட்காலம் வெறும் இரண்டு மாதங்கள்தான். ஆனால், ராணித்தேனீயின் ஆயுட்காலம் 3 ஆண்டுகளாகும். இதற்குக் காரணம் மற்ற தேனீகளைப்போல ராணித்தேனீ வெறும் மகரந்தங்களை உணவாக எடுத்துக் கொள்வதில்லை. இது ராயல் ஜெல்லி என்ற உணவைத்தான் எடுத்துக் கொள்ளும். இந்த ராயல் ஜெல்லி 7 முதல் 14 நாள் வயதுடைய தேனீக்களின் உடலில் சுரக்கும் திரவம். இது முழுக்க முழுக்க புரோட்டீன் நிறைந்த திரவம். இதுதான் ராணித்தேனீயின் வாழ்நாளை அதிகரிக்கக் காரணம். அதேபோல ராணித்தேனீ லட்சக்கணக்கான முட்டைகளை இடுவதற்கும் ராயல் ஜெல்லிதான் காரணம். ஒரு கூட்டில் 100 ஆண்தேனீக்களும், பல வேலைக்காரதேனீக்களும் இருக்கும். ராணித்தேனீ தனது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே ஆண்தேனீயுடன் இணையும். அவ்வாறு இணைவதற்கு 100 ஆண்கள் தேனீக்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும். அந்தப் போட்டியில் வெற்றி பெற்று இணையும் ஆண்தேனீ அத்துடன் மரணித்துப் போகும்.

அந்தப் போட்டி என்னவெனில் நன்றாகப் புரதம் உண்டு வளர்ந்த ராணித்தேனீ உயரமாகப் பறக்கத் தொடங்கும். அதேபோல, அதனுடன் சேர விரும்பும் ஆண்தேனீக்களும் உயரப் பறக்க ஆரம்பிக்கும். பறக்கும் ஆண்தேனீக்களில் எந்த ஆண்தேனீ தனது உயரத்திற்கு இணையாகப் பறக்கிறதோ அதையே தனது துணையாக ராணித்தேனீ தேர்வு செய்யும். அந்த ஒருமுறை இணையும் ராணித்தேனீ பல லட்சம் தேனீக்களை உருவாக்கும் தன்மையை பெற்று விடும். ராணித்தேனீ தனது மூன்றாண்டுக் காலத்தில் தொடர்ந்து முட்டையிட்டுக் கொண்டே இருக்கும். ராணித்தேனீ ஒவ்வொரு தேனீக்கும் ஒவ்வொரு வேலையை நிர்ணயம் செய்யும். அவ்வாறு நிர்ணயம் செய்யும் வேலைகளை வேலைக்காரத் தேனீக்கள் தட்டாமல் செய்ய வேண்டும். ஒன்று முதல் மூன்று வயதுடைய தேனீக்கள் தேன் கூட்டினை சுத்தம் செய்யும் வேலையைச் செய்யும். 3 வயது முதல் 6 வயதுள்ள தேனீக்கள் எடுத்து வந்து வைக்கும் இனிப்பு துகள்களை தன்னுடைய சிறகால் தேன் கூட்டில் அடுக்கும் வேலையைச் செய்யும். 7 முதல் 14 வயதுடைய தேனீக்கள் ராணித்தேனீக்கு ராயல்ஜெல்லியை உருவாக்கி ஊட்டிவிடும் வேலையைச் செய்யும். 14 முதல் 21 நாள் வயதுடைய தேனீக்கள்தான் தேன்கூட்டை வடிவமைக்கும் பொறியாளர்கள்.

தேனீ

21 முதல் 23 நாள் வயதுடைய தேனீக்கள் மருத்துவ தேனீக்கள், சிப்பாய் தேனீக்கள் மற்றும் பிணம் தூக்கி தேனீக்கள் என மூன்று குழுக்களாக பிரிந்து பணியினை செய்யும். மருத்துவ தேனீயானது காயம்பட்ட தேனீக்களுக்கு சிகிச்சை அளிக்கிறது. சிப்பாய் தேனீக்கள்தான் கூட்டை பாதுகாக்கும் வேலையைச் செய்யும். தேன்கூட்டைக் கலைத்தால் பறந்து பறந்து தாக்கும் சிப்பாய்கள் இவைதான். பிணம் தூக்கும் தேனீக்கள், இறந்த தேனீக்களை கூட்டில் இருந்து வெளியேற்றும் வேலையைச் செய்யும். 23 முதல் 25 நாள் வயதுடைய தேனீக்கள், தேன்கூட்டின் ஒற்றர்கள். பூக்கள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைப் பணியாளருக்கு தெரியப்படுத்துவது இதன் வேலை. ஒற்றர்தேனீ தனது வயிற்றை ஆட்டி வட்டம் போட்டு பணியாளர் தேனீக்குத் எவ்வளவு தூரத்தில் தேன் இருக்கிறது என்பதை காட்டும். 25-60 நாள் வயதுடைய தேனீக்கள், ஒற்றர்கள் காட்டிய திசையில் இருக்கும் மகரந்தங்களை தேன் சேகரிக்கும் பையிலும், தனது வயிற்றில் மதுரத்தையும் சுமந்து வரும் வேலையைச் செய்யும்.

இவ்வளவு செயல்கள் நடந்தும் ஒரு தேனீ தனது வாழ்நாளில் 1 டீஸ்பூன் தேனை மட்டுமே சேகரிக்கும். இதற்காக ஒருநாளில் 50 ஆயிரம் மலர்களின் மேல் அமர்ந்து தேன்களை இந்த தேனீக்கள் சேகரித்து வருகின்றன.

Related posts

மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் தரும் உணவுகள்!!!

nathan

சர்க்கரை நோயே வராது!மரத்தில் காய்க்கும் சுகர் மாத்திரை!

nathan

முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்க, பூண்டு கலந்த பால்

nathan

தெரிஞ்சிக்கங்க…மிக அதிக சர்க்கரையுள்ள இந்த உணவுகளையெல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுடுங்க!!

nathan

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத உணவுகள்

nathan

எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா?

nathan

பச்சை பயறு அதிக சத்துக்கள் சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும். ..

nathan

சளியை துரத்தும் தூதுவளை துவையல்!

nathan

கல்லீரலை பதம் பார்க்கும் உணவுகள்! தெரிந்துகொள்வோமா?

nathan