31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

இனிப்புச்சீடை

என்னென்ன தேவை?

அரிசி மாவு, கம்பு மாவு,
சிறுதானிய கலந்த மாவு – அனைத்தும் கலந்தது – 2-1/2 கப்,
வறுத்து அரைத்த உளுத்த மாவு – 1/2 கப்,
சுத்தமாக துருவிய பாகுவெல்லம் – 1 கப்,
நைஸாக துருவிய தேங்காய் – சிறிது,
ஏலக்காய்த்தூள் – சிறிது,
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு,
நெய் – 1 டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

அனைத்து மாவையும் 2 முறை சலித்து உப்பு சேர்க்கவும். வெல்லத்தை கரைத்து வடித்து, அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக சலித்த மாவுக் கலவையுடன் சேர்க்கவும். தேங்காய்த்துருவல், நெய் சேர்த்து முறுக்கு மாவு போல் பிசைந்து உருட்டவும். உருட்டும்போது உடையக்கூடாது. சிறிய உருண்டைகளாக உருட்டி கொண்டு, ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும். எண்ணெயை காயவைத்து கொஞ்சம் கொஞ்சமாக பொரித்தெடுக்கவும். ஆறவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் வைத்து படைத்து பரிமாறவும்.

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ்: உப்பு சீடை

nathan

ஒக்காரை

nathan

கார பூந்தி

nathan

ஸ்பிரிங் ரோல்ஸ் / Spring Rolls

nathan

சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படி

nathan

ஓட்ஸ் குழி பணியாரம்

nathan

மீன் கட்லெட்

nathan

பண்டிகை காலத்தில் கண்டிப்பாக இடம்பெறும் வடை, பாயசம்…

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் சாக்லேட்

nathan