36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
பழரச வகைகள்

ராகி பாதாம் மில்க் ஷேக்

மாலையில் எப்போதும் காபி, டீ என்று குடிப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக ராகி மற்றும் பாதாம் கொண்டு மில்க் ஷேக் தயாரித்து குடித்தால், பசி அடங்குவதோடு, உடல் நலமும் மேம்படும். மேலும் இது மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்ட ஓர் ஆரோக்கியமான மில்க் ஷேக்.

சரி, இப்போது அந்த ராகி பாதாம் மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: ராகி மாவு – 2-3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 1/2 கப் பாதாம் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன் குளிர்ந்த பால் – 2 கப் சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை போட்டு, தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் கெட்டியாகும் வரை கிளறி, இறக்கி குளிர வைக்க வேண்டும். பின்பு மிக்ஸியில் அதனைப் போட்டு, அத்துடன் சர்க்கரை, பாதாம் பவுடர், பால் சேர்த்து சிறிது நேரம் அரைத்து இறக்கி பரிமாறினால், ராகி பாதாம் மில்க் ஷேக் ரெடி!!!

Related posts

ராகி சாக்லேட் மில்க்க்ஷேக்

nathan

ஆப்பிள் – திராட்சை லஸ்ஸி

nathan

மாம்பழ பிர்னி

nathan

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்

nathan

சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்

nathan

கேரட் – பப்பாளி ஜூஸ் செய்வது எப்படி

nathan

வெயிலுக்கு இதமான நுங்கு ரோஸ்மில்க்

nathan

வென்னிலா மில்க் ஷேக்

nathan

சம்மரை சமாளிக்க… குளுகுளு ரெசிப்பி!

nathan