30.2 C
Chennai
Saturday, Jun 29, 2024
201703201042011870 how to make chana palak SECVPF
மருத்துவ குறிப்பு

சத்தான சைடு டிஷ் சன்னா பாலக்

சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சன்ன பாலக் சூப்பராக இருக்கும். செய்துவம் எளிமையானது. சத்தானதும் கூட. இன்று இந்த சன்ன பாலக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சைடு டிஷ் சன்னா பாலக்
தேவையான பொருட்கள் :

வெள்ளை கொண்டைக்கடலை – அரை கப்,
பாலக்கீரை – ஒரு சிறிய கட்டு,
வெங்காயம் – 2,
தக்காளி – ஒன்று,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஒன்று,
மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம்மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
கஸ்தூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) – ஒரு சிட்டிகை,
சர்க்கரை, சீரகம் – தலா கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை :

* கொண்டைக் கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, குக்கரில் 5 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளியை அரைத்து கொள்ளவும்.

* பாலக்கீரையை நன்கு சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து ஆற வைக்கவும்.

* பச்சை மிளகாயுடன் கீரையைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, இஞ்சி – பூண்டு விழுது போட்டு சிறிது வதக்கிய பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை விழுதாக அரைத்து சேர்த்து… உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் மற்றும் கரம்மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* அனைத்து நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது அரைத்த கீரை விழுதை சேர்க்கவும்.

* அடுத்து இதனுடன் வெந்த கொண்டைக்கடலையை சேர்க்கவும் (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம்).

* இதனை 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கஸ்தூரி மேத்தி சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

* சூப்பரான சைடு டிஷ் சன்னா பாலக் ரெடி. 201703201042011870 how to make chana palak SECVPF

Related posts

கரோனாவிற்கு கண்கள் சிவப்பதும் அறிகுறியா..? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

உங்களது மார்ப கங்களை சிக்கென வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்!

nathan

ரத்த குழாய் அடைப்பு நீங்க இயற்கையான முறையில் குணம் பெற வழிமுறைகள்

nathan

இந்த மாதிரி சத்தமெல்லா உங்க உடம்புக்குள்ளக் கேட்டுருக்கீங்களா…? பாத்து பக்குவமா இருந்துக்குங்க!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குங்குமப்பூ சாப்பிட்டால் ஆபத்தா?

nathan

ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்!

nathan

விபரீத விளையாட்டு ஆபத்தை ஏற்படுத்தும்

nathan

இவை தான் உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கிறது என்பது தெரியுமா?

nathan

அபார்ஷன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை

nathan